அழகு கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய்!
அழகின் ரகசியம்! அழகு கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய்! விளம்பரத்துல வர்ற மாதிரி பளபளப்பா நீளமான கூந்தல் இருக்குறதுக்குக் காரணம் நல்லெண்ணெய்தான். ர...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8660.html
அழகின் ரகசியம்!
அழகு கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெய்!
விளம்பரத்துல வர்ற மாதிரி பளபளப்பா நீளமான கூந்தல் இருக்குறதுக்குக் காரணம் நல்லெண்ணெய்தான். ராத்திரி தூங்கறதுக்கு முன்னாடி தலையில நல்லெண்ணெய் தேய்ச்சு ஊற வெச்சு மறுநாள் காலையில குளிக்கவும். இதை ரெண்டு நாளைக்கு ஒருமுறை செய்யவும் .
அடிக்கடி ஷாம்பூ போட்டுக் குளிக்கிறதால கூந்தல் வறண்டு போகும். இதைத் தடுக்க பாதாம் எண்ணெய் கூட கொஞ்சம் ஆலிவ் எண்ணெய் கலந்து, சுட வெச்சு தலையில தேய்ச்சு, உடனே ஒரு டவல் எடுத்து சுடு தண்ணியில நனைச்சு, பிழிஞ்சு, தலையில இறுக்கமா கட்டிக்கொள்ளவும். இதனால மயிர்க்கால்கள்ல இருக்குற ஓட்டைகளை அடைச்சுக்கிட்டு இருக்குற அழுக்குகள்லாம் ஓடிப் போய்டும். முடி நல்லா வளரும்.
'ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்.. இந்த மூணையும் தினசரி சாப்பாட்டுல கொஞ்சமா சேர்த்துக்கிட்டா நமக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்’ அதனால வீட்டு சமையல்ல எப்பவும் இந்த மூணு எண்ணெயும் கண்டிப்பா இருக்கவேண்டும் .
பப்பாளியை அரைச்சு கை, கால், முகத்துல தடவி வந்தா நாளடைவில முகம் மெருகு ஏறும்
நார்மல் டைப் ஸ்கின் குளிர் தாங்காம தோல் வெடிக்க ஆரம்பிச்சிரும். அதைத் தவிர்க்கிறதுக்காக ஆவிவ் எண்ணெய் தடவிக்கொள்ளவும். வெடிப்பெல்லாம் ஓடிப் போய் சருமம் மிருதுவா, பளபளப்பா ஆகிடும்.
Post a Comment