சமையல் குறிப்புகள்! சுவையான கத்தரிக்காய் சட்னி
இட்லி, தோசைக்கு எத்தனை நாள் தான் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்து போரடிப்பீர்கள். இந்த வித்தியாசமான சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_8314.html
இட்லி, தோசைக்கு எத்தனை நாள் தான் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்து போரடிப்பீர்கள். இந்த வித்தியாசமான சட்னியை ஒரு முறை ட்ரை பண்ணிப் பாருங்க!
தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் - 1/4 கிலோ, பெரிய வெங்காயம் - 2, சிகப்பு மிளகாய் - 6, துறுவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன், பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், உப்பு ருசிக்கேற்ப, எண்ணெய் -வதக்க, தாளிக்க, கடுகு, சீரகம் - 1/4 டீஸ்பூன்
செய்முறை : கத்தரிக்காயை பொடியாக நறுக்கி தேவைப்படும் வரை தண்ணீரில் போட்டு வைக்கவும். வெங்காயத்தை மிகப் பொடியாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சிகப்பு மிளகாய், வெங்காயம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். வெங்காயம் பாதி வதங்கியதும் கத்தரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கியதும் அதிகப்படியாக உள்ள எண்ணெயை வடித்துவிட்டு காயைச் சூடு ஆறவிடவும். ஆறியபின் தேங்காய், உப்பு, பொட்டுக்கடலை சேர்த்து கரகரப்பான சட்னியாக அரைக்கவும், சிறிது எண்ணெயைச் சூடாக்கி கடுகு, சீரகம் தாளித்து சட்னியில் கலக்கவும்!
Post a Comment