சுவையான மட்டன் வறுவல் சமையல்
மட்டன் மிளகு வறுவல் தேவையான பொருட்கள் : ஆட்டுக்கறி (சாப்ஸ்) - ½ கிலோ மிளகு - 4 ஸ்பூன், மஞ்சள் -½ டீஸ்பூன் பூண்டு - 2 பல் பெரியது இஞ்சி - சி...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_4372.html
மட்டன் மிளகு வறுவல்
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கறி (சாப்ஸ்) - ½ கிலோ
மிளகு - 4 ஸ்பூன், மஞ்சள் -½ டீஸ்பூன்
பூண்டு - 2 பல் பெரியது இஞ்சி - சிறிய துண்டு
தக்காளி - 2 பெரியது
வெங்காயம் - 2
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 100 கிராம்
செய்முறை :
கறியை நன்கு சுத்தம் செய்து கழுவி மஞ்சள்தூள், உப்பு போட்டு பேனில் வைத்து அரை வேக்காடு வேக வைக்கவும். பிறகு மிளகு, இஞ்சி, பூண்டு இவற்றை மிக்ஸியில் மைபோல் அரைத்துக் கொள்ளவும். அரிந்த வெங்காயம், தக்காளியை வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தப்பின் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவையை வதக்கிய தக்காளியுடன் சேர்த்து கலவைபோல் ஆனபிறகு, வேகவைத்த கறியினை அதில் கொட்டி உப்பு, காரம் சரி பார்த்து, மூடி போட்டு மீண்டும் வேகவிடவும். கலவை சேர்ந்து வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து நன்கு கிளறி எடுக்க, சுவையான மட்டன் வறுவல் தயார். காய்ச்சலில் கிடந்தவர்கள் உடல் நலம் தேற இது ஏற்ற டிஷ்.
Post a Comment