என் நண்பரின் தந்தை ஏழு வருடத்துக்கு முன் இறந்துவிட்டார். அவர் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி கணக்குகளில் சுமார் ரூ.2 லட்சம் எஃப்.டியில் போட்டுவைத்திருந்தார். இதற்கு நாமினியாக யாரையும் நியமிக்கவில்லை. அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். இந்தப் பணத்தை எப்படி பெறுவது?
சந்திரன், மதுரை. ஜி.கந்த சுப்ரமணியன், உதவி பொதுமேலாளர், எஸ்பிஐ. ‘‘உங்கள் நண்பரின் தந்தை வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருந்தால...

https://pettagum.blogspot.com/2014/08/2.html
சந்திரன், மதுரை. ஜி.கந்த சுப்ரமணியன், உதவி பொதுமேலாளர், எஸ்பிஐ.
‘‘உங்கள் நண்பரின் தந்தை வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட்
வைத்திருந்தால், இப்போது உயிருடன் இருப்பவர் வங்கியை அணுகி டெபாசிட்
பணத்தைப் பெறலாம். ஒருவேளை அவர் ஏதாவது உயில் எழுதி வைத்திருந்தால்,
உயிலில் குறிப்பிடப் பட்டுள்ளவர்கள் வங்கியை அணுகி டெபாசிட்டை எடுத்துக்
கொள்ளலாம்.
உயில் எதுவும் எழுதவும் இல்லை; அதே நேரத்தில்
நாமினியையும் குறிப்பிடவில்லை எனில், டெபாசிட்டை திரும்பத் தர வங்கி சில
ஆவணங்களைக் கேட்கும். அதாவது, டெபாசிட் வைத்திருப்பவரின் இறப்பு சான்றிதழ்,
சட்டப்படி பெறப்பட்ட வாரிசு சான்றிதழ் மற்றும் டெபாசிட்டை சட்டப் படியான
வாரிசுக்குத் தரும்படி கேட்டு வங்கிக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும். மேலும்,
வங்கி டெபாசிட்டை தரும்போது, இந்த டெபாசிட்டின் மீது வேறு யாருக்காவது
உரிமை உள்ளது என நிரூபிக்கப்பட்டால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வேன்
என்கிற வாக்குறுதியை உங்களிடம் இருந்து வாங்கிக்கொள்ளும். அதேபோல, ரத்த
சொந்தம் இல்லாத ஒன்று அல்லது இரண்டு தனிப்பட்ட நபர்களிடம் ஷூரிட்டி வாங்கி
வங்கியில் ஒப்படைத்தால்தான் டெபாசிட்டை பெற முடியும்.”
2 comments
வங்கியில் டெபாசிட் வைப்பவர்கள் அனைவரும் கவனிக்கவேண்டிய அம்சம். எப்போதும் ஜாயின்ட்டாகவே டெபாசிட்களை வைக்கவும். இல்லாவிட்டால் அவசியம் நாமினி குறிப்பிடவும்.
இனிய நண்பர் பழனி கந்தசாமி அவர்களின் கருத்துகளுக்கு நன்றிகள் பல! பெட்டகம் A.S.முஹம்மது அலி.
Post a Comment