ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - 9 மூட்டுவலி போக்கும் முடக்கத்தான்!

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - 9 மூட்டுவலி போக்கும் முடக்கத்தான்! 'காத தூரம் நடக்கிறதுக்குள்ள கால் வலி பின்னிப் பெடலெடுக்க...

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும் - 9
மூட்டுவலி போக்கும் முடக்கத்தான்!
'காத தூரம் நடக்கிறதுக்குள்ள கால் வலி பின்னிப் பெடலெடுக்குதே பாட்டி? உன்னால மட்டும் எப்படி இந்த வயசுலயும் நடந்தே கோயிலுக்கெல்லாம் போயிட்டு வர முடியுது?'

'வயசானாலே கொஞ்சம் மூட்டுவலி வரத்தான் செய்யும். ஆனா, ரொம்ப தொல்லை தர்றதுக்கு முன்னாலேயே, பக்குவமா வைத்தியம் பார்த்துக்குவேன்ல...'
'அது என்ன பக்குவம்... எனக்கும் கொஞ்சம் சொல்லேன்'
'வயசானாலேயே, மூட்டுக்கு இடையில் இருக்கிற சவ்வு கொஞ்சம் உலர்ந்து, எலும்புகளுக்கு உள்ள இடைவெளி குறைஞ்சு வலி எடுக்க ஆரம்பிச்சிடும். கவனிக்காமல் விட்டால், கால் மெதுவாக வளைஞ்சுகூட போகும். ஆஸ்டியோ ஆர்தரைட்டிஸ்-ங்கிற மூட்டுவலிதான் அது.'

'பென்குயின் பாட்டி... அதான், உன் ஃப்ரெண்ட் பெயின்குயின் மாதிரியே நடப்பாங்களே. கால் வலியினால் தான் அவங்க அப்படி நடக்கிறாங்களா பாட்டி?'

'ஆமா. ஆனா, மூட்டு தேயறதுக்குள்ள முன்ஜாக்கிரதையா நாம் முந்திக்கணும். எடை அதிகரிக்காமப் பார்த்துக்கணும். மாதவிடாய் முடியும் சமயத்துல இருந்தே உணவில் கால்சியம் நிறைய சேர்க்கணும். 'புளி துவர் விஞ்சிக்கின் வாதம்’. அதனால், புளிப்பு சுவையுள்ள வத்தக் குழம்பு, புளியோதரை எல்லாம் கூடாது. வாய்வு தரக் கூடிய உருளைக்கிழங்கு, தரைக்கு அடியில் விளையற கிழங்குகள், காராமணி, கோஸ், இதெல்லாம் குறைவாதான் சேர்த்துக்கணும்.'

'என்ன சேர்க்கலாம். அதை முதல்ல சொல்லுங்க'
'கால்சியம், இரும்புச் சத்துள்ள தானியங்களை கஞ்சி, கூழ், அடை செய்து சாப்பிடலாம். கம்பங் கூழுக்கு மோரும், சின்ன வெங்காயமும் சூப்பர் காம்பினேஷன். உடலுக்கு நன்மை தர்ற புரோ பயாட்டிக் ஆன்டிஆக்சிடன்ட் டானிக்கும் கூட.
முடக்கத்தான் (முடக்கறுத்தான்) கீரை, மூட்டு வலிக்கு ரொம்ப நல்லது. யூரிக் அமிலம் அதிகரித்து வர்ற 'கவுட்’ நோய்க்கு இது கை மேல் பலன்கொடுக்கும். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள், முடக்கத்தானில் உள்ள 'தாலைட்ஸ்’ என்ற ரசாயனம் குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைச்சிருக்கிறதை கண்டுபிடிச்சிருக்காங்க. மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைச்சு, சிறுநீரகத்துக்கு எடுத்துட்டுப் போயிடும். சிறுநீரகம் இதை வெளியேற்றும்போது, சோடியத்தையும், பொட்டாஷியத்தையும் நம் உடம்பிலேயே விட்டுவிடுமாம். இது, ஒருமிக முக்கிய இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துமாம். இதனால், உடல் சோர்வு ஏற்படாது. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறதாம்.'

'முடக்கத்தான் கீரையை எப்படி சாப்பிடணும் பாட்டி?'
''கீரையைத் தண்ணீர்ல போட்டுக் கொதிக்க வைச்சா, அதுல இருக்கிற மருத்துவ சத்துக்கள் அழிஞ்சிடும். பொடியா நறுக்கி, தோசை மாவோட கலந்து, தோசையா செஞ்சு சாப்பிடலாம்.'
'மூட்டுவலி இருக்கிறவங்களுக்கு மலச்சிக்கல் இருக்கும்னு சொல்றாங்களே..?'

'அப்படி இல்லை. ஆனால், மலச்சிக்கல் பிரச்னை இருந்தால், அதை முதல்ல சரி செய்யவேண்டியது ரொம்ப அவசியம். 'விரேசனத்தால் வாதம் தாழும்’னு ஒரு சித்த மருத்துவ மொழி கூட இருக்கு.'
'விரேசனம்னா என்ன பாட்டி?'

'பேதி உண்டாக்க மருந்து கொடுப்பது. நாடி, உடல் வன்மை பார்த்து விளக்கெண்ணெயில் ஆரம்பித்து, பல வகை பேதி மருந்துகளை சித்த மருத்துவர்கள் கொடுப்பாங்க. அதை ஒரு நாள் எடுத்துக்கிட்டா, நல்லா 7 - 10 தடவை பேதி ஆகி, உடலின் வாதத் தன்மை குறைஞ்சிடும். அதுக்குப் பிறகு தகுந்த வைத்தியம் பார்த்துக்கிட்டா, மூட்டுவலி சீக்கிரத்திலேயே குறையும். ஆனால், மருத்துவரோட ஆலோசனை இல்லாமல் இதைச் சாப்பிடக் கூடாது.''

''நீ, தினமும் ராத்திரி, ஒரு பொடியை பால்ல போட்டு சாப்பிடுவியே... அது எதுக்கு பாட்டி?''

'அமுக்கராங்கிழங்கு பொடி. பாலில் வேக வைச்சு தூளாக்கிய பொடி. இந்தப் பொடியைச் சாப்பிட்டால், மூட்டுகளுக்கு இடையே இருக்கிற அழற்சி நீங்கி வலியும் குறையும். கூடவே நொச்சி, தழுதாழை, ஆமணக்கு இலையை, விளக்கெண்ணெய் அல்லது, வாத கேசரி தைலத்தில் நல்லா வதக்கி, மூட்டுக்கு ஒத்தடம் கொடுத்தாலும் வலி சீக்கிரமே போயிடும்.

கால் வலியோட வீக்கம் இருந்தால், முருங்கை இலை, தேங்காய் துருவல், வலம்புரிக்காய், ஓமம், நொச்சித்தழை, ஆமணக்கு இலை, தழுதாழை, இதையெல்லாம் ஒரு காடா துணியில் பொட்டலமாக் கட்டி ஒரு கடாயில், நாராயணத் தைலத்தை லேசாக இளஞ்சூடாக்கி, அதில் இந்த பொட்டலத்தைப் போட்டு, அந்த எண்ணெயில் லேசாய்ப் பிரட்டணும்.  அதை வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலியும் போகும்; வீக்கமும் மறையும். ஆவாரை இலை, வேலிப்பருத்தி இலை இரண்டையும் தூளாக்கி, முட்டை வெள்ளைக்கரு (சைவமா இருந்தால் உளுத்தமாவு) கலந்து, மூட்டுல பத்து போட்டு அடுத்தநாள் கழுவினால் வீக்கம் மறைஞ்சிடும். 'ஃப்ரோஸன் ஷோல்டர்’ என பாடாய்ப் படுத்தும் தோள் மூட்டில் வரும் வலிக்குக் கூட இந்த பத்துதான் பெஸ்ட்.'

'பாட்டி நீ வெறும் ஆத்தா இல்லை... ஆர்த்தாஃபிசிஷியன்தான் போ!'

Related

ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... 3513355843504447523

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item