உடலுக்கு குளிர்ச்சி... மனதுக்கு மலர்ச்சி! வாசம் வீசும் மலர்களின் ஜாலம்...இயற்கை தரும் இளமை வரம்!
...

https://pettagum.blogspot.com/2013/07/blog-post_8694.html
முல்லை,
ஜாதி, இருவாச்சி... மல்லிகையின் வரிசையைச் சேர்ந்த இந்தப் பூக்களின் வாசம்,
அழகு ஆகியவை நம் மனதை மயக்கும். அதுமட்டுமல்ல... உடலுக்குக்
குளிர்ச்சியையும் குதூகலத்தையும் ஒருங்கே அள்ளித் தரும் அற்புத மலர்கள்
இவை. நம் தேகத்துக்குப் புத்துணர்ச்சி யூட்டி, பொலிவைத் தரும் வல்லமையும்
இவற்றுக்கு உண்டு.
இந்தப் பூக்களின் அழகுப் பலன்களை ஆராய்வோமா?வெயிலால் ஏற்படும் வியர்வை நாற்றம், வியர்க்குரு ஆகியவற்றை விரட்டியடித்து, உடலைக் குளிர்ச்சியாகவும், கூந்தலை பளபளப்பாகவும் வைக்கும் முல்லைத் தைலம் மற்றும் குளியல் பவுடர் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோமா?
குளியல் பவுடர் தயாரிக்க...
உலர்ந்த
முல்லைப் பூ, வெந்தயம், புங்கங்காய் - தலா 100 கிராம், கடலைப்பருப்பு -
கால் கிலோ... இவற்றை மெஷினில் கொடுத்து அரைத்தால், குளியல் பவுடர் தயார்.
முல்லைத் தைலம் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த பவுடரைக் கொண்டு அலசினால்
முடி கொட்டுவது நீங்கும். கூந்தல் சூப்பர் சுத்தமாகிவிடும். தோலும்
பளபளப்புடன் வாசனையாக இருக்கும்.
வியர்க்குரு, பருக்களால் முகம் பொலிவிழந்து இருக்கிறதா?
ஜாதிப்பூ
மொட்டு, முல்லை மொட்டு - தலா 10 பூக்கள்.... இவற்றுடன் 2 டீஸ்பூன் பாலை
சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதைக் கொண்டு பருக்களை
மூடுங்கள். முகத்திலும் பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும்
பொலிவும் கூடும்.
முகம் 'ப்ளீச்' செய்ததுபோல் பிரகாசமாக ஜொலிக்க...
ஏடு இல்லாத
தயிர் - 2 டீஸ்பூன், செம்மரத்தூள் - அரை டீஸ்பூன், உலர்ந்த ஜாதிப் பூ - அரை
கப்... இந்த மூன்றையும் அரைத்து முகத்தில் பூசி, 5 நிமிடம் கழித்து
கழுவுங்கள். முகம் கண்ணாடி போல் மின்னும்.
உடலுக்கு குளிர்ச்சி, மலர்ச்சி தந்து... அயற்சி போக்கும் ஜாதிப் பூ தைலம்!
நகங்கள் கறுத்து, உடைந்து, நிறம் மாறியிருந்தால்...
முல்லை, ஜாதி,
இருவாச்சி மலர்களை சம அளவு எடுத்து அரைத்து வடிகட்டுங்கள். இந்த எசென்ஸை
ஒரு பாட்டிலில் வைத்து, அவ்வப்போது பஞ்சினால் தோய்த்து நகங்களில்
பூசுங்கள். உடைந்த நகம் வளரும். நகம் சிப்பியைப் போல் பளபளக்கும்.
தலையில் பேன், பொடுகு தொல்லை தீர...
தலா ஒரு
டீஸ்பூன் கடுகு எண்ணெய், விளக்கெண்ணெயுடன் இருவாச்சி மல்லியின் வேரைப்
பொடித்து சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியை வெந்நீரில்
குழைத்து தலையில் தேய்த்து, சீயக்காய் போட்டு அலசுங்கள். பேன், பொடுகு
ஓடிவிடும்.
வாசனையான ஹென்னா!
மருதாணி பவுடர்
- ஒரு கப், ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, டீ டிகாஷன் - ஒரு கப், ஒரு
எலுமிச்சம்பழத்தின் சாறு... இவற்றுடன் மொட்டு முல்லை, ஜாதி, இருவாச்சி
மல்லி மூன்றையும் அரைத்த விழுது ஒரு கப் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.
இந்த ஹென்னாவை தலைக்குப் போடுவதால் முட்டை வாசனை மறைந்து, பூக்களால்
கூந்தல் வாசம் வீசும்.
டாக்டர் ஜீவா சேகர், நேச்சுரோபதி மருத்துவர், சென்னை:
ஜாதி
மல்லி குளிர்ச்சியைத் தரும். இருவாச்சி கண் நோய்க்கு மிகவும் நல்லது.
முல்லை மணம் வீசும். இந்த மலர்களிலிருந்து வாசனைத் திரவியங்கள்
எடுக்கப்படுகின்றன.
Post a Comment