டிப்ஸ்... டிப்ஸ்... வீட்டுக்குறிப்புக்கள்,
அ டை, தோசை, வடை மாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை நேரடியாக சேர்க்காதீர்கள். சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்த்தால், அவை நறுக்க...

https://pettagum.blogspot.com/2013/07/blog-post_6924.html
அடை, தோசை, வடை மாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை
நேரடியாக சேர்க்காதீர்கள். சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு
சேர்த்தால், அவை நறுக்கென்று வாயில் அகப்படாமல், நன்கு வெந்து சுவையாக
இருக்கும்.
ஃபெவிகாலை
பயன்படுத்தியதும், அதில் சில துளிகள் தண்ணீர் விட்டு மூடி வையுங்கள்.
மீண்டும் எடுத்து உபயோகிக்கும்போது தண் ணீரை வடித்துவிட்டு பயன்
படுத்தினால், காய்ந்து போகா மல் நீண்ட நாட்களுக்கு வரும்.
தோசை
மாவு புளித்து விட்டதா? அதில் கால் டீஸ்பூன் டேபிள் சால்ட், அரை டம்ளர்
வெந்நீரை ஊற்றிக் கலக்கி, தோசை வார்த்தால் புளிப்பு மறைந்து ருசியும்
அமோகமாக இருக்கும்.
========================================================================
அல்வா, கேசரி,
உப்புமா கிளறும்போது ஜல்லிக் கரண்டியின் பின்பக்கத்தைத் திருப்பி வைத்துக்
கிளறுங்கள் (அதாவது கரண்டியின் குழிவான பக்கம் கீழே இருப்பது போல்). இதனால்
கையும் வலிக்காது. கிளறுவதும் ஈஸி.
========================================================================
===================================================================================
=========================================================================
ஃப்ரிட்ஜில்
உள்ள டிரேக்க ளில் நேரடியாக காய்களை அடுக்கும்போதுஅழுக்கு படிந்து விடும்.
ஒரு பனியன் துணியைத் தண்ணீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து டிரேயில் விரித்து
விடுங்கள். இப்போது காய்களை அதன் மேல் வைத்து, அதே துணியால் சுற்றி
விடுங்கள். ஃபிரிட்ஜும் அழுக்காகாது... காய்களும் வாடாமல் ஃப்ரெஷ்ஷாக
இருக்கும்
Post a Comment