ரத்த அழுத்தம்... பனிபோல் விலக்கிடும் பன்னீர் ரோஜா! பாட்டி வைத்தியம்,
...
https://pettagum.blogspot.com/2013/07/blog-post_5519.html
பன்னீர் ரோஜா பூ தெரியும்தானே..! அதுல நாலு பூவோட இதழ்களை மட்டும் தனியா எடுத்து, ஒரு டம்ளர் தண்ணி விட்டு நல்லா காய்ச்சணும். அரை டம்ளரா சுண்டினதும் இறக்கி வெச்சிரணும். காலையில வெறும் வயித்துல அதைக் குடிச்சிட்டு வந்தா... ரத்த அழுத்தம் சரியா போயிரும்.
இதே நோய்க்கு கைவசம் இன்னொரு வைத்தியமும் இருக்கு. அரை டம்ளர் வாழைத்தண்டு சாறு, அரை டம்ளர் மோர் ரெண்டையும் கலந்துக்கிடணும். இதை 10 முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து குடிச்சிட்டு வந்தோம்னா ரத்த அழுத்தம் குணமாயிரும்.
ரத்த அழுத்தத்தால வரும் மயக்கம் சரியாக...
சிலருக்கு ரத்த
அழுத்தத்துனால தலை சுத்தல், மயக்கம்னு வந்து படுத்த படுக்கையாக்கிடும்.
அந்த நேரத்துல ஒரு டேபிள்ஸ்பூன் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில போட்டு
வறுத்துக்கணும். தேன் பதத்தில் பாகுமாதிரி வந்ததும், 3 இன்ச் அளவுள்ள
இஞ்சித்துண்டை நல்லா அரைச்சி வடிகட்டி, ஒரு டம்ளர் தண்ணிய சேர்க்கணும்.
இதுகூட 25 கிராம் காஞ்ச திராட்சையைப் போட்டு கொதிக்க வைக்கணும். இது அரை
டம்ளரானதும் இறக்கி வெச்சி ஆறினதும் பழத்தை சாப்பிட்டு தண்ணியையும்
குடிக்கணும். காலைல, சாயந்தரம்னு மூணு நாள் தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா
மயக்கம் தெளிஞ்சி, ரத்த அழுத்தமும் குணமாயிரும்.
Post a Comment