எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ? சர்க்கரையோடு சண்டைபோடும் சின்ன வெங்காயம் !
சிச்சன் கிளினிக் ! ...

எந்த நோய்க்கு என்ன சாப்பாடு ? |
''சர்க்கரை குறைபாட்டின் ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்கள், வாக்கிங், உணவுக்கட்டுப்பாடு மூலம் சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியும்.
இரண்டாவது கட்டத்தில் இருப்பவர்கள்... உணவுக்கட்டுப்பாடு, மாத்திரை மற்றும் உடற்பயிற்சியின் மூலம் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
மூன்றாவதாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருக்கும் 30 வயதையட்டியவர்களுக்கு, உணவுக்கட்டுப்பாடு, எக்சர்சைஸ் மற்றும் இன்சுலின் போட்டுக் கொள்வதால் மட்டுமே சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியும். சில பெண்களுக்கு மகப்பேறு காலத்தில் மூன்றாவது, ஆறாவது வாரத்துக்குள் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இந்த காலகட்டத்தில் சர்க்கரை குறைபாடு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. கர்ப்ப காலம் முடிந்ததும், திரும்பவும் பழைய நிலைக்கும் வரலாம். சிலருக்கு அது தொடர்ந்து நீடிக்கவும் செய்யலாம். எனவே, இந்த விஷயத்தில் கவனமாக இருந்து, உடம்பைக் கண்காணிக்க வேண்டும்.
எந்த வேலையும் செய்யாமல், படுத்தபடுக்கையாக இருக்கும் சர்க்கரை குறைபாடுடைய ஒரு நபரின் உடல் எடை 60 கிலோ இருந்தால், 60 ஜ் 25 கலோரி = 1,500 கிலோ கலோரி அளவுக்கு தினமும் உணவு எடுத்துக் கொள்ளவேண்டும். குறைந்த வேலையை செய்யும் நபராக இருந்தால், உடல் எடையுடன் 30 கலோரியை பெருக்கினால் வரும் கிலோ கலோரி அளவுக்கு உணவு எடுத்துக் கொள்ளலாம். அதிக வேலை செய்யும் நபராக இருந்தால், உடல் எடையுடன் 35 கலோரியை பெருக்கி, அதற்கேற்ப உணவு எடுத்துக் கொள்ளவேண்டும் (கலோரி உணவு என்பது எனர்ஜியை குறிப்பிடும் அளவாகும். அதாவது, 100 கிராம் அரிசியில் 348 கிலோ கலோரியும், 100 கிராம் பருப்பில் 335 கிலோ கலோரியும், 100 கிராம் காய்கறிகளில் 20 முதல் 40 கிலோ கலோரியும் இருக்கின்றன. இந்த அளவை ஆதாரமாக வைத்து, கணக்குப் போட்டுப் பார்த்து உங்களின் சாப்பாட்டு மெனுவை ரெடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்).
பொதுவாக சர்க்கரை குறைபாடுள்ளவர்கள் உணவை ஒரே நேரத்தில் உண்ணாமல், குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறிது சிறிதாக உண்பது நல்லது. அரிசியின் அளவைக் குறைத்து, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்வது அவசியம்'' என்று பட்டியலிட்டுச் சொன்னார் கிருஷ்ணமூர்த்தி.
இதோ... சர்க்கரை குறைபாடுடையவர்கள், சட்டென்று செய்து சாப்பிட, இரண்டு ரெசிபிகளோடு தயாராகிவிட்டார் 'செஃப்' ஜேக்கப்.
--------------------------------------------------------------------------------------------------------------
செய்முறை: காய்கறிகளைப் பொடியாக நறுக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். மிளகுத்தூள், பட்டை, கிராம்பு, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீர் 2 டம்ளராக குறுகியதும், கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் சூப் ரெடி.
----------------------------------------------------------------------------------------------------------
ரெசிபி சொல்லி முடித்த ஜேக்கப், ''பீன்ஸ் சூப்பை பசியெடுக்கும்போதெல்லாம், செஞ்சு சாப்பிடுங்க. அடிக்கடி பசி எடுக்காது. இந்த சூப்பில் ஒரு கோதுமை பிரெட்டை தோய்த்தும் சாப்பிடலாம்.
உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தர்றதுல்ல வெங்காயத்துக்கு ஈடு இணையே இல்லை. வெங்காயப் பிரட்டலைச் சாப்பிட்டா... அடிக்கடி தாகம் எடுக்காது. இதை பிரெட் மேல் தடவியும் சாப்பிடலாம்'' என்று ஆலோசனைகளையும் சொன்னார்.
இந்த ரெசிபிகளைக் கேட்ட 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி, ''சர்க்கரையின் அளவைக் குறைப்பதில் மசாலா பொருளான பட்டைக்கும் தனி பங்குண்டு. பீன்ஸ் சாப்பிடுவதால் நார்ச்சத்து கிடைக்கிறது. வெங்காயப் பிரட்டலில் வெந்தயம் சேர்ப்பதால், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவதோடு, சர்க்கரையின் அளவும் குறையும்'' என்று 'சபாஷ்' சர்டிஃபிகேட் தந்தார்.
Post a Comment