மல்டி கிரெயன் பிரெட் ---- சமையல் குறிப்புகள்,
காலை டிஃபனாக பிரெட்டை நீட்டினால், 'வியாதிக்காரங்கதானே பிரெட் சாப்பிடுவாங்க?’ என்று ஒதுக்கிவிடுவோம். நாலு ...

https://pettagum.blogspot.com/2013/06/blog-post_2593.html
காலை டிஃபனாக பிரெட்டை நீட்டினால், 'வியாதிக்காரங்கதானே
பிரெட் சாப்பிடுவாங்க?’ என்று ஒதுக்கிவிடுவோம். நாலு இட்லி, கொஞ்சம்
கெட்டிச்சட்னி, ஒரு மெதுவடை அல்லது பொங்கல், பூரி உருளை சப்ஜி என்று சகல
சுவையுடன் கூடிய டிஃபன்தான் வயிற்றுக்குள் இறங்கும்.
ஆனால், 'பிரெட்டுடன் தானியங்கள், விதைகளைச் சேர்த்து
வித்தியாசமான சுவையில் மல்ட்டிகிரெய்ன் பிரெட் செய்து கொடுங்க... முகம்
சுளிப்பவர்கள்கூட, மூக்குப் பிடிக்க வளைத்துக்கட்டுவார்கள். சத்துக்கு
சத்து... சுவைக்கு சுவை.’ என்கிறார் ஊட்டச் சத்து நிபுணரான காந்திமதி,
மல்டிகிரெய்ன் பிரெட் செய்யும் முறை இங்கே...
தேவையானவை: பிரெட்
- 1 கிலோ, தண்ணீர் - 1 கப், கொழுப்பு குறைந்த வெண்ணெய் - 1 ஸ்பூன், உப்பு -
தேவைக்கேற்ப, சூரியகாந்தி விதை - 2 ஸ்பூன், எள் - 1 ஸ்பூன், ஆளி விதை
(ப்ளாக்ஸ் சீட்ஸ்) - 1 ஸ்பூன், கம்பு அல்லது ராகி - 1 ஸ்பூன், ஓட்ஸ் - 1
ஸ்பூன், கோதுமை மாவு - 2 கப், பால் பவுடர் - 1 ஸ்பூன், பனை வெல்லம் - கால்
கப், ஈஸ்ட் - 1 1/2 ஸ்பூன்.
ஈஸ்ட் தவிர, மேலே சொன்ன அத்தனை பொருட்களையும் ஒன்றாகக்
கலந்து பிசையவேண்டும். மாவு பதத்துக்கு வந்த பிறகு, அதில் ஈஸ்ட்டைச்
சேர்த்து ஒரு பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணெய் தடவி, சில
நிமிடங்கள் ஊறவைக்கவும். இந்தக் கலவை உப்பி வரும்போது, அதை மைக்ரோவேவ்
அவனில் வைத்து பேக் செய்யவும். வெளியில் எடுத்ததும் சதுரம் சதுரமாக
வெட்டிக் கொள்ளவும்.
எப்படி சாப்பிடலாம்?
காலை உணவுக்கு வெண்ணெய், ஜாம் தடவிச் சாப்பிடலாம்.
முட்டை ஆம்லெட் செய்தும் உண்ணலாம். மாலை நேரத்தில் சான்ட்விச்சாக
செய்யலாம். சப்பாத்திக்குப் பதிலாக இதைச் சாப்பிடலாம். வளரும்
குழந்தைகளுக்கு இதனுடன் பருப்பு, கீரை, காய்கறிகளுடன் சேர்த்து
சாப்பிடும்போது, சத்துக்கள் உடலில் கிரகிக்கப்படும்.
சத்துக்கள்:
இரண்டு துண்டு பிரெட்டில் 124 கலோரி
இருக்கிறது. இதில், மாவுச் சத்து, கொழுப்புச் சத்து, புரதம், நார்ச் சத்து
மற்றும் சோடியம், பொட்டாஷியம் போன்ற தாது உப்புகளும்
நிறைந்துள்ளன. மூன்று வகையான விதைகளும் மூன்று வகையான தானியங்களும் இதில்
சேர்ந்திருப்பதால், உடலுக்கு நல்ல உறுதியைக் கொடுக்கும். நல்லக்
கொழுப்பும், நார்ச் சத்தும் இதில் இருப்பதால், ஜீரண சக்தியைக்
கொடுக்கும். வயிற்றை சுத்தப்படுத்தும்.
Post a Comment