நாட்டு வைத்தியம்! ...
நாட்டு வைத்தியம்!
பெரும்பாடு பிரச்னைக்கு தீர்வு காணும் தும்பை இலை ! |
மாதவிடாய்க்
கோளாறுகளுக்கு போனமுறை மருந்து சொன்னேன். இந்தமுறை 'பெரும்பாடு'ங்கிற
நோய்க்கு மருந்து சொல்றேன்.அதாவது மாதவிடாய் நேரத்துல அதிக ரத்தப்போக்கோட
வயித்துவலி சேர்ந்து வர்றதை பெரும்பாடுன்னு சொல்வாங்க. இந்த நோயால
அவதிப்படுறவுக நான் சொல்ற வைத்தியத்தை கவனமா செய்யுங்க... கைமேல பலன்
கெடைக்கும்.
வயிற்றுவலி, அதிக ரத்தப் போக்கு போன்ற பெரும்பாடு நோய் குணமாக...
நாவல் மரப்பட்டை 50 கிராம்
எடுத்து, அதுல தண்ணி விட்டு இடிச்சி, 100 மில்லி வர்ற அளவுக்கு தண்ணி
சேர்த்து காலையில மூணு நாள் வெறும் வயித்துல குடிச்சா... பெரும்பாடு
தீரும்.
ஒரு முழு வாழைப்பூவை எடுத்து
இடிச்சி சாறு பிழிஞ்சி, அதோட ஒரு ஸ்பூன் மோர் விட்டு கலக்கி, காலையில
வெறும் வயித்துல மூணு நாள் குடிச்சா... மாதவிடாய் நேரத்துல வர்ற
வயித்துவலியும், ரத்தப்போக்கும் சரியாயிரும்.
கடுக்காய் பத்தி எல்லோருக்கும்
தெரிஞ்சிருக்கும். அதோட தோலை மட்டும் 25 கிராம் அளவு எடுத்து, ஒண்ணு,
ரெண்டா தட்டிப்போட்டு, 100 மில்லி தண்ணி விட்டு கொதிக்க வைக்கணும். அது 25
மில்லியா குறுகினதும் வழக்கம்போல மூணு நாள் குடிங்க. பெரும்பாடு பிரச்னை
சரியாகும்.
அருகம்புல்
10 கிராம், மாதுளை இலை 10 கிராம் எடுத்து. 100 மில்லி தண்ணியில போட்டு
கொதிக்க வச்சி, 50 மில்லியாக்கி காலையில பாதி, சாயங்காலம் பாதி
குடிக்கணும். இதேபோல 5 நாள் குடிச்சா மாத விடாய் நேரத்துல வர்ற வயித்துவலி,
அதிக ரத்தப்போக்கு சரியாயிடும்.
தும்பை இலை ஒரு புளியங்கொட்டை
அளவு எடுத்து அரைச்சி, பாலோட கலந்து சாப்பிடணும். இப்படி மூணு நாள்
சாப்பிட்டா பெரும்பாடு பிரச்னை சரியாயிரும்.
இலந்தை இலை, மாதுளை இலை ரெண்டும்
ஒவ்வொரு கைப்பிடி எடுத்து 200 மில்லி தண்ணியில போட்டு காய்ச்சி, 100
மில்லியாக்கி காலைல குடிக்கணும். மூணுநாள் செஞ்சாலே பெரும்பாடு பிரச்னை
சரியாகும்.
நெல்லி வற்றல், படிகாரம்,
கல்கண்டு தலா 50 கிராம் எடுத்து பொடி பண்ணி வச்சிக்கிடணும். அதில கால்
ஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் மோர் சேர்த்து காலை, மாலை 10 நாள் சாப்பிட்டாலே
பெரும்பாடு சரியாகும்.
- இன்னும் சொல்றேன்...
Post a Comment