வெள்ளைப்படுதல் ...தாமதமான மாதவிடாய்...ஹெல்த் ஸ்பெஷல்,
நாட்டு வைத்தியம்! அன்னமேரி பாட்டி ...

https://pettagum.blogspot.com/2013/06/blog-post_1455.html
நாட்டு வைத்தியம்! |
அன்னமேரி பாட்டி
|
வெள்ளைப்படுதலை விரட்டியடிக்கும் மணத்தக்காளி ! |
வெள்ளைப்படுதல் சரியாக...
ஆனைநெருஞ்சில் பத்தி
கேள்விப்-பட்டிருப்-பீங்க. அதோட இலை மூணு (எண்ணிக்கை) பறிச்சிட்டு வந்து,
ஒரு டம்ளர் நீராகாரத்தில போட்டு, நல்லா கலக்கணும். கொஞ்ச நேரத்துல
கொழகொழப்பா வரும். அதை அப்பிடியே கண்ணை மூடிக்கிட்டு காலையில வெறும்
வயித்துல தொடர்ந்து மூணுநாள் குடிச்சீங்கனா... வெள்ளைப்படுதல் வராது.வேரோடு சேர்த்து, முழுசா ஒரு மணத்தக்காளி செடியை தண்ணி விட்டு அலசி, ஒரு லிட்டர் தண்ணியில போட்டு காய்ச்சி, அரை லிட்டராக்கணும். அதை வெள்ளைப்படுதல் படுற இடத்துல ஊத்திக் கழுவினா... நல்ல குணம் கிடைக்கும்.
தாமதமான மாதவிடாய்...
மாவிலிங்கப்பட்டையும் நல்ல மருந்து-தான். அதை மையா அரைச்சி நெல்லிக்-காய் அளவு எடுத்து காலையில வெறும் வயித்துல சாப்பிட்டீங்கனா தாமதமான மாதவிடாய் தடையில்லாம வரும்.
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவலா வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலயும், சாயங்காலமும் சாப்பிட்டா... மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.
மாதக்கணக்கில் மாதவிடாய் வராமலிருப்பவர்களுக்கு...
வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தா... மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.
கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில வெறும் வயித்துல குடிச்சிட்டு வந்தா, மாசக்கணக்குல வராத மாதவிடாய் வரும்.
Post a Comment