மினி ரெசிபி - தர்பூசணி பரோட்டா!
தர்பூசணி பழத்தின் சிவப்பு பகுதியை மட்டும் சாப்பிட்டு விட்டு, அதன் அடிப்பகுதியில் வெள்ளையாக இருப்பதை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், அத...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_9686.html
தர்பூசணி பழத்தின் சிவப்பு பகுதியை மட்டும் சாப்பிட்டு விட்டு, அதன்
அடிப்பகுதியில் வெள்ளையாக இருப்பதை தூக்கி எறிந்து விடுகிறோம். ஆனால், அதை
வீணாக்காமல், அந்த பகுதியை துருவிக் கொள்ளவும். அத்துடன், கோதுமை மாவு சம
அளவு எடுத்து, சிறிது இஞ்சி, பூண்டை அரைத்து, அத்துடன் சேர்க்கவும். பின்,
கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி போட்டு, சீரகப் பொடி, சிறிதளவு உப்பு,
தேவையானால் சிறிது புளித் தண்ணீர் சேர்த்து, கட்டியில்லாமல் மிருதுவாக
பிசையவும். பின், உருண்டைகளாக்கி, பரோட்டா போல் தட்டி, தோசைக்கல்லில்
சுட்டு, சாப்பிட்டால், மாலை நேரத்துக்கு வித்தியாசமான டிபன் ரெடி.
Post a Comment