விபரீதகரணி முத்ரா ஆசனம் -- ஆசனம்,
சமஸ்கிருதத்தில் விபரீத என்றால் தலைகீழான என்று அர்த்தம். கரணி என்றால் இயக்கம் என்பது பொருள். உடலானது சூரிய, சந்திர சக்திகளைக் கொண்டு இயங...

சமஸ்கிருதத்தில் விபரீத என்றால் தலைகீழான என்று அர்த்தம். கரணி என்றால் இயக்கம் என்பது பொருள். உடலானது சூரிய, சந்திர சக்திகளைக் கொண்டு இயங்கி வருகிறது. கீழ்புறம் உள்ள சூரிய சக்தியை மேலே கொண்டு வந்து மேல்புறம் உள்ள சந்திர சக்தியை கீழே தள்ளுவது தான் விபரீதகரணி ஆசனம் ஆகும்.
தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு, இடுப்பு பகுதியை 2 கைகளால் தாங்கியவாறு கால்களை உயரே தூக்க வேண்டும். நன்றாக உயரே தூக்கியதும் தரையில் முழங்கை இடுப்பை தாங்கிய நிலையில் இருக்க வேண்டும். கால்களை உயரே சேர்த்தே வைத்திருப்பதுடன், இறுக்கமாக இல்லாமல் கால்களை லேசாக தளர்ச்சியாகவே வைத்துக் கொள்ளலாம்.
கண்கள் கால்களை ஒரே நேர் கோட்டில் காண்பது போன்று இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். சுவாசமானது இயல்பான நிலையில் இருப்பதுடன் குறைந்தது 10 முதல் 20 வினாடிகள் வரை விபரீத கரணி முத்ரா ஆசனத்தை செய்யலாம்.
நன்றாக பயிற்சி எடுக்கும் வரை இந்த ஆசனத்தை ஒரே ஒரு முறை செய்தால் போதுமானது. முகச்சுருக்கங்கள் நீங்க இந்த ஆசனம் துணைபுரிகிறது.. தலைப்பகுதிக்கு ரத்த அழுத்தங்கள் கொடுப்பதால், தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி அதிக ரத்தம் பெறுகிறது.
இதனால் செம்பட்டை நிற முடிகள் கொஞ்சம் கொஞ்சமாக நாளடைவில் மாறும். ஞாபக சக்தி, ஜீரண சக்தி அதிகமாகும். மலச்சிக்கல் வராமல் தடுக்கிறது.
Post a Comment