"எலுமிச்சை ரவை' உப்புமா--சமையல் குறிப்புகள்,
" எலுமிச்சை ரவை ' உப்புமா செய்முறை! தேவையான பொருட்கள்: ரவை- ஒரு கப், எலுமிச்சம் பழம்-ஒன்று, பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (க...
https://pettagum.blogspot.com/2013/03/blog-post_8500.html
"எலுமிச்சை ரவை' உப்புமா செய்முறை!
தேவையான பொருட்கள்: ரவை- ஒரு கப், எலுமிச்சம் பழம்-ஒன்று, பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி, முட்டைக் கோஸ்)-கால் கப், பச்சை, மிளகாய், துருவிய இஞ்சி, உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி, சாறு பிழியவும். ரவையை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, துருவிய இஞ்சி சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவையை இதனுடன் சேர்த்துக் கிளறி, தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இத்துடன் வறுத்த ரவையை சேர்த்து லேசாகக் கிளறி, நன்கு வேக விடவும். வெந்த பிறகு, எலுமிச்சம் பழச் சாற்றைக் கலந்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

Post a Comment