ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்---உடற்பயிற்சி,
சீராக உடல் இயங்க, உடற்பயிற்சி அவசியம். ஆனால், சமயங்களில் உடற்பயிற்சியே சில சிரமங்களைத் தரும் அபாயமும் இருக்கிறது. அதனால், உடற்பயிற்சியில...

உடற்பயிற்சி செய்த பின்பு கூல் டவுன் (Cool Down) , ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் கண்டிப்பாகச் செய்ய வேண்டும். இல்லை என்றால், கை - கால் தசைகளில், மூட்டுகளில்... இறுக்கம், வலி, சோர்வு போன்ற தொந்தரவுகள் உண்டாகும்.
ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகள்....
* கால்களைச் சற்று அகலமாக வைத்து நிற்க வேண்டும்
* வலது கையால் ஏதேனும் ஒரு பிடிமானத்தை ஏற்படுத்திக் கொண்டு இடது கையால் இடது கணுக்காலைப் பின்பக்கமாக வளைத்துப் பிடிக்க வேண்டும். கால் முட்டி மடங்கிய நிலையில் இருக்க வேண்டும்.
* 10 நொடிகளுக்குப் பிறகு படம் பழைய நிலைக்கு வர வேண்டும். (கால்களை அகலமாக வைத்து நிற்க வேண்டும்)
* இடது கையால் ஏதேனும் ஒரு பிடிமானத்தை ஏற்படுத்திக் கொண்டு வலது கையால் வலது கணுக்காலைப் பின்பக்கமாக வளைத்துப் பிடிக்க வேண்டும். முன்பு செய்வதைப் போலவே கால் முட்டி மடங்கிய நிலையில் இருக்கட்டும்.
* 10 நொடிகளுக்குப் பிறகு முதல் நிலைக்கு வரவும். (கால்களை அகலமாக வைத்து நிற்க வேண்டும்)
Post a Comment