வெண்ணெய் இனிப்பு'--சமையல் குறிப்புகள்,
இது " வெண்ணெய் இனிப்பு ' தேவையானவை : மைதா, வெண்ணெய், சமையல் எண்ணெய், சர்க்கரை தலா கால் கிலோ, பன்னீர் 5 துளிகள், பச்சரிசி மாவு...

தேவையானவை:
மைதா, வெண்ணெய், சமையல் எண்ணெய், சர்க்கரை தலா கால் கிலோ, பன்னீர் 5 துளிகள், பச்சரிசி மாவு 3 மேசைக்கரண்டி, பேக்கிங் பவுடர் 2 சிட்டிகை.
அலங்கரிப்பதற்கு:
முந்திரி, வண்ணங்கள் சேர்த்த தேங்காய் பூக்கள்.
செய்முறை: மைதா மாவுடன் பேக்கிங் பவுடரைச் சேர்த்து சலிக்கவும். அதில் 150 கிராம் வெண்ணெய் சேர்த்து பிசைந்து, ஒரு மணி நேரம் ஊறவிடவும். சர்க்கரையை கம்பிப் பதத்தில் பாகு காய்ச்சி, அதனுடன் பன்னீர் சேர்த்து கலக்கவும். மீதி இருக்கும் வெண்ணெயில் பச்சரிசி மாவு கலந்து, நன்றாக அடித்து வைக்கவும். ஊறிய மைதா மாவை பெரிய எலுமிச்சைப்பழம் அளவு எடுத்து, மெல்லிய வட்டமாக தேய்த்து, அதன் மேல் பரவலாக மாவுக்கலவையை தடவவும்.
இப்படி ஒன்றுக்குமேல் ஒன்றாக 5 வட்டங்கள் சேர்த்து, ஒன்றாக சுருட்டி நீளவாக்கில் எடுக்கவும். அவற்றை ஒரே அளவுள்ள 4 துண்டுகளாக வெட்டவும். ஒவ்வொரு துண்டையும் அதிகம் அழுத்தாமல், விரல் கனத்திற்கு வட்டமாக தேய்க்கவும். எண்ணெயை மிதமாகக் காய வைத்து, தேய்த்த மைதா வில்லைகளைப் போட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். தீ அதிகமாக எரிந்தால் உள்ளே சரியாக வேகாது. பொரித்து எடுத்த வில்லைகளை சர்க்கரைப் பாகில் ஊறவிட்டு, 5 நிமிடங் களுக்குப்பின் எடுத்து அதன் மேல் சிறியதாக நறுக்கிய முந்தரிப் பருப்பையும், வண்ண தேங்காய் பூக்களையும் தூவி அலங்கரிக் கவும். இது மிகவும் சுவையான இனிப்பு. சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடுவர்.
Post a Comment