சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் கொய்யா! --- பழங்களின் பயன்கள்,
மு க்கனிகளில் ஒன்றாக இது தவறி இருக்கலாம். ஆனால், முக்கனிகளுக்கு நிகரான சுவையையும், சத்துக்களையும்...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_1423.html
கொய்யாப் பழத்தில் பல வகைகள் இருந்தாலும், கொய்யாவின் உட்புறச் சதையின் நிறத்தைக் கொண்டு அதைச் 'சிவப்புக் கொய்யா’ என்றும், 'வெள்ளைக் கொய்யா’ என்றும் இரு வகைகளாகப் பிரிக்கலாம். எந்த நிறத்தில் இருந்தாலும் அவற்றின் சத்துக்கள் ஒன்றுதான். இலை, பழம், பட்டை எனக் கொய்யாவின் ஏ டு இசட் பயன்கள் குறித்து தஞ்சையைச் சேர்ந்த மூத்த சித்த மருத்துவர் ஜி.கவிதா விரிவாகப் பேசினார்.
வாய்ப்புண் உள்ளவர்கள், கொய்யாவின் கொழுந்து இலையைப் பறித்து மென்று சாப்பிட்டால் உடனே ஆறும். வாய்துர்நாற்றத்தையும் நீக்கும். உடலில் காயங்கள் ஏற்பட்டால் கொய்யா இலைகளை அரைத்து அதன் சாற்றைப் பூசி வந்தால் காயம் ஆறிவிடும். கொய்யா இலைகளை எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரில் வாய்க் கொப்ப ளித்தால் பல்வலி நீங்கும். ஈறுகளில் ரத்தக்கசிவு இருந்தால், நின்றுவிடும். பற்களும், ஈறுகளும் பலம் பெறும். பதின் பருவத்தினருக்கு முகத்தில் பருக்கள் ஏற்படும்போது அதை அவர்கள் அடிக்கடி கிள்ளுவதால் முகத்தில் நிறைய தழும்புகள் உண்டாகும். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அந்தத் தழும்புகளின் மேல் பூசி வந்தால் தழும்பு மறையும்.
வைட்டமின்-சி, பி, கால்சியம், மாக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்கள் நிறைந்து
பட்டை:
குழந்தைகளுக்கு 'அதிசார பேதி’ எனப்படும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், கொய்யா மரத்தின் பட்டையை கொதிக்கும் தண்ணீரில் போட்டுக் கஷாயம் வைத்துக் கொடுத்தால் வயிற்றுப்போக்கு உடனே நின்றுவிடும்.
கொய்யா... சில கட்டுப்பாடுகள்:
நல்லதுதான் என்றாலும் கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. காரணம் வாதம், பித்தம், கபம் போன்றவை அதிகமாகி மயக்கம் வரலாம். கொய்யாப் பழத்தை இரவில் சாப்பிடக் கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். உணவு சாப்பிடுவதற்கு முன்பு கொய்யா சாப்பிடுவது உகந்தது அல்ல. சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. ஆஸ்துமா, வாதநோய், மற்றும் 'எக்ஸிமா’ போன்ற சருமப் பிரச்னைகள் உள்ளவர்கள் கொய்யாவைச் சாப்பிடக் கூடாது. கொய்யாவின் தோலில்தான் அதிக சத்துகள் உள்ளன. இதனால் தோலை நீக்கிச் சாப்பிடக் கூடாது.

Post a Comment