சாக்லேட்! டேஸ்ட்டா... வேஸ்ட்டா? --- ஹெல்த் ஸ்பெஷல்
நி றைய சாக்லேட் சாப்பிட்ட குழந்தையைக் கோபத்தில் அடித்துவிட்டாள் அம்மா. யாருடைய தேற்றுதலுக்கும் பிடிகொடு...

சாக்லேட் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு நன்மையா தீமையா என்கிற கேள்வியுடன் உணவியல் நிபுணர் புவனேஸ்வரியை சந்தித்தோம். இரண்டு சாக்லேட்டுகளை கையில் எடுத்துக் கொடுத்து அர்த்த புஷ்டியோடு பேச்சை ஆரம்பித்தார். ''குழந்தைப் பருவமும் சாக்லேட்டும் பிரிக்க முடியாதவை. சாக்லேட்டை அளவாகச் சாப்பிட்டால் அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது. குழந்தைகள் அதிலும் குறிப்பாக, மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சாக்லேட்டுக்கு அடிமையாக விடக்கூடாது. சாக்லேட் இனிப்புச் சுவை கொண்டது. அதனால், அதன் சுவைக்கு அடிமையான குழந்தைகளுக்கு மற்ற உணவுகள் பிடிக்காது. சில குழந்தைகள் சாப்பாட்டையே வெறுப்பார்கள். இதனால், அவர்கள் உணவில் சமச்சீர் இல்லாமல் போய் இளம் வயதிலேயே பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் வரக்கூடும்.
பாண்டிச்சேரியில் இருக்கும் சாக்லேட் பார்லர் 'ஸுகா’ வின் நிறுவனர் ஸ்ரீநாத் பாலசந்திரன் சாக்லெட் பற்றி மேலும் பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டார். ''ஒயிட் சாக்லேட், மில்க் சாக்லேட் மற்றும் டார்க் சாக்லேட் எனச் சாக்லேட்டுகள் மூன்று வகைகளில் கிடைக்கின்றன. டார்க் சாக்லேட் சாப்பிடக் கசப்பாக இருந்தாலும் அதுதான் உடல் நலத்துக்கு நல்லது. இதில் கோகோ நிறைய இருக்கும். ரத்த அழுத்தம் குறையும்போது இந்தச் சாக்லேட்டைச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இதில் ஆன்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது ஒரு கப் க்ரீன் டீயை அருந்துவதற்குச் சமம்.
சாக்லேட் வாங்கும்போது அதில் என்னென்ன சத்துக்கள் எந்த அளவு உள்ளன என்ற பட்டியல் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும். 'சுகர் ஃப்ரீ’ என்று குறிப்பிட்டிருந்தாலும்கூட அதில் 0.01 சதவீதம் வனிலா சேர்த்திருப்பார்கள். அது போதும் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவை உயர்த்த. கோகோவும் வெண்ணெயும் சேர்த்துத் தயாரிக்கப்பட்டதா அல்லது தாவரக் கொழுப்பில் இருந்து செய்யப்பட்டதா என்று பார்த்து வாங்க வேண்டும். கோகோ பட்டர் சாக்லேட்தான் நல்லது.''
ஸ்வீட் எடு... கொண்டாடு!
Post a Comment