நீரிழிவை தடுக்கும் பஸ்சிமோத்தாசனம்---ஆசனம்,
செய்முறை... விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்தாற் போல் நீட்டி வைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளை காதுகளை ஒட்டினாற...

விரிப்பில் மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் சேர்த்தாற் போல் நீட்டி வைத்துக் கொள்ளவும். இரண்டு கைகளை காதுகளை ஒட்டினாற் போல் தலைக்கு மேல் நீட்டி வைத்துக் கொள்ளவும். கைவிரல்கள் சேர்ந்திருக்க வேண்டும். இப்போது மூச்சை நன்றாக இழுத்துக் கொள்ளவும். இப்போது கைகள் காதுகளை விட்டு விலகாதபடி மூச்சைப் பிடித்து எழுந்து உட்காரவும்.
இப்போது மூச்சை விட்டபடியே முன்னுக்கு குனிந்து கால்களின் கட்டை விரல்களை, கைகளின் ஆள்காட்டி விரல், நடுவிரல் இவை இரண்டையும் கொக்கி போல் மடக்கி பிடித்துக் கொள்ளவும். இந்த நிலையில் மூச்சை ஒரு தரம் இழுத்து விட்டவாறே இன்னமும் கீழே குனிந்து முழங்கைகள் முட்டிக்கால்களை ஒட்டி தரையை தொட்டவாறு இருக்கும் படியான நிலைக்கு வரவும்.
அதாவது முகத்தை முழங்கால்களின் சந்து வரை எட்டிக் குனியவும். மடக்கின் முழங்கைகள் தரையில் படவேண்டும். இந்த நிலையில் ஐந்து முதல் பத்து எண்ணும் வரை இருக்கலாம். பின்னர் கைகள் மட்டும் கால்கள் இரண்டின் பெருவிரல்களை மட்டும் பிடித்திருக்கும் படியான நிலைக்கு நிமிர்ந்து வரவும்.
இதற்கடுத்து கைகள் இரண்டையும் முதல்நிலையில் சொன்னது போல் காதுகளை ஒட்டியிருக்கும் படியான நிலையில் வைத்து நிமிர்ந்து உட்காரவும். பின்னர் உடலை சிறிது சிறிதாக பின்னோக்கி சாய்ந்து படுக்கை நிலைக்கு வரலாம். இப்போது மூச்சை இறுக்கிப் பிடிக்காமல் சாதாரண நிலையில் விட்டு வரவும். இவ்வாறு செய்து முடிப்பது ஒரு பஸ்சிமோத்தாசனம் ஆகும். இது போல் மூன்று முதல் நான்கு முறை செய்யலாம்.
எச்சரிக்கை..........
இந்த ஆசனத்தை வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் செய்ய கூடாது. அறுவை சிகிச்சை நடந்து குறிப்பிட்ட காலங்கள் ஆகி இருந்தால் சிறந்த ஆசன நிபுணர்களுடன் ஆலோசனை பெற்று ஆசனத்தை செய்யலாம். ஆசனங்களை பழக்கமில்லாத புதிய கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை எக்காரணம் கொண்டு செய்யக் கூடாது.
பயன்கள்...
பஸ்சிமோத்தனம் செய்யும் போது, குடல்கள், பித்தப்பை, இரைப்பை முதலியன நன்றாக அமுக்கப்படுகின்றன. உடலின் உயிராற்றலை வலுப்படுத்தும் முதுகெழும்பு, முதுகு நரம்பு வளைத்து இழுக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு குறைபாடு உண்டாவது தடுக்கப்படுகிறது.
வயிற்று வலி, தலைவலி, மூலக்கடுப்பு, இடுப்பு வலி, முதுகுவலி, பலவீனம் முதலியவை நீங்குகிறது. பெண்களிடத்தில் நீண்ட நாட்களாக இருக்கும் மாதவிடாய் கோளாறுகள் பூரணமாக குணமாகி விடும். இடுப்பு வலுவடையும்.
இளம்பெண்கள் திருமணத்திற்கு முன் இந்த ஆசனத்தை செய்து வருவதால் இடுப்பு சார்ந்த இனப்பெருக்க உறுப்புகள் வலுவடைந்து திருமணத்திற்கு பின் எளிதான சுகப்பிரசவம் உண்டாக வழி வகை ஏற்படும்.
Post a Comment