டிப்ஸ்---வீட்டுக்குறிப்புக்கள்,
டிப்ஸ் து ணிகளை அலசும்போது தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து அலசினால், துணிகள் எளிதில் சாயம் போகாது.கசகசாவை அரைத்து, பாலில் கலந்து ச...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_8987.html
துணிகளை அலசும்போது தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து அலசினால், துணிகள் எளிதில் சாயம் போகாது.கசகசாவை அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால் இரவில் நிம்மதியாக உறக்கம்வரும். நரம்புகளை சுறுசுறுப்பாக இயங்கவைக்கும் சக்தியும் கசகசாவுக்கு உண்டு.உங்கள் வீட்டு வாண்டுகளின் ஷூ, பாலீஷ் போட்டபிறகும் அழுதுவடிகிறதா? ஆறிய டீ டிக்காஷனை ஷூ மீது லேசாகத் தடவி, சிறிது நேரம் கழித்து பாலீஷ் போட்டுப்பாருங்கள். புது ஷூவா என்று கேட்பார்கள்!
தேங்காயை துருவும் போது மேலே இருந்து உள்பக்கமாக துருவ வேண்டும்.அப்போதுதான் மீதியிருக்கும் தேங்காயை மறுநாள் துருவும்போது வில்லைகளாக உதிர்ந்து விழாது. அப்படியில்லாமல் உள்ளே இருந்து வெளிப்பக்கமாக துருவும்போது ஓரங்களில் ஓட்டுக்கும் தேங்காய்க்கும் இடையே விரிசல் விழுந்து, காற்று உள்ளே புகுந்துவிடுகிறது. அதனால்தான் மறுநாள் துருவும்போது துண்டுகளாக உடைந்து விழுகிறது.
போளி தட்டும்போது ஓரங்களில் மாவு ஒதுங்கிவிடும். காரணம் பூரண உருண்டையை நடுவே வைத்து, மாவை இழுத்து மூடுவதுதான். அதனால் பூரணத்தை உருண்டையாக வைக்காமல், வடைபோல தட்டையாகத் தட்டி வைத்தால் ஓரங்களில் மாவு அதிகமாகாது.
குடி தண்ணீர் சுத்திகரிப்பதற்காக ஆர்.ஓ சிஸ்டம் வைத்திருப்பவர்கள், வீணாகும் உப்புத் தண்ணீரை சிங்க்கில் விட்டுவிடுவார்கள். எட்டு லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்கும்போது பத்து லிட்டர் தண்ணீர் வீணாகும். அப்படியென்றால் ஒருநாளுக்கு எவ்வளவு தண்ணீர் வீணாகும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அப்படி வெளியேறும் தண்ணீரை பக்கெட்டில் சேமித்து வைத்து, பாத்திரம் கழுவவும், தோட்டத்து செடிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்..
பாகற்காயின் கசப்பு நீங்க, உள்ளே இருக்கும் கொட்டைகளை நீக்கவும். பிறகு பாகற்காயை துண்டுகளாக்கி தண்ணீரில் அலசிவிட்டு மோரில் ஒருமணி நேரம் ஊறவிடவும். பிறகு சமைத்துப் பாருங்கள். அடிக்கடி பாகற்காயைச் சமைக்கச் சொல்லி அடம்பிடிப்பார்கள் குழந்தைகள்!
கீரையுடன் சிறிது எள் சேர்த்து வேகவைத்தால் நிறம் மாறாது.
கிழங்கு வகைகளை சிறிது உப்பு கலந்த நீரில் போட்டுவைத்து,
பிறகு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
திக்கான தேங்காய்ப்பால் கிடைக்க, தேங்காய் துருவலை சிறிது நேரம் சூடான நீரில் போட்டு மூடிவைத்துவிட வேண்டும். பிறகு எடுத்து பால் பிழிந்தால், இரண்டாம் பால் எடுக்கத்தேவையே இல்லாத அளவுக்கு தேங்காய்ப்பால் கிடைக்கும்.
Post a Comment