ஓய்வாசனம்--ஆசனம்,
செய்முறை..... விரிப்பில் மல்லாக்க படுக்கவும். தலை விரிப்பின் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கால்களை சற்றே அகல விரித்து...
https://pettagum.blogspot.com/2012/11/blog-post_8.html
செய்முறை.....
விரிப்பில் மல்லாக்க படுக்கவும். தலை விரிப்பின் மேல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். கால்களை சற்றே அகல விரித்து வைக்கவும். துடைகளை விட்டு விலகியிருக்குமாறு கைகள் முழுதையும் இரு பக்கமும் நீட்டவும். உள்ளங்கைகள் மேல் நோக்கி இருக்கவேண்டும்.
வாயை லேசாக திறக்கவும். இப்போது நீங்கள் அமைதியான உறக்கத்திற்கு செல்லவேண்டும். மூச்சுக்காற்றை இயல்பாக மூக்கு வழியாக சுவாசிக்கவும். உடல் மனம் ஆகியவற்றின் நினைவின்றி உறக்க நிலையில் இருக்கவேண்டும். இது போன்ற சாந்தமான நிலையில் நீங்கள் எதையும் உணரமாட்டீர்கள், எதையும் கேட்கமாட்டீர்கள், புலன் உணர்வு இருக்காது மனம் ஒரு நிலையான நிலையில் இருக்கும்.
பயன்கள்....
ஆசனங்கள் முடித்த பின் கண்டிப்பாக இந்த ஆசனம் செய்ய வேண்டும். 5 முதல் 20 நிமிடம் வரை செய்யலாம். அற்புதமான பலன்களைக் கொடுக்கக்கூடியது. மூளைக்கு நல்ல ஓய்வு. உடல் முழுவதையும் உறுதிப்படுத்தி ஊக்கமளிக்கிறது.
எல்லாத் தசைகளும் மூட்டுகளும் தளர்த்தப்படுகின்றன. தினமும் இருவேளை செய்யலாம். பிரணாயாமம் செய்வதற்கு உடல் ஏற்றதாகிறது. 30 நிமிடப் பயிற்சி 3 மணி நேர ஆழ்ந்த தூக்கத்திற்கு சமமாகிறது.

Post a Comment