தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு சில குறிப்புகள்...
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு சில குறிப்புகள்... முதலில், நீங்கள் எதுதொடர்பாக புகார் செய்ய விரும்புகிறீர்களோ...

உங்கள் புகார் மனுவுக்கு உரிய பதில் இல்லை என்றால்தான், 'பொதுத் தகவல் அதிகாரி'யை தொடர்பு கொள்ள வேண்டும் (ஒவ்வொரு அரசு அலுவலகத்திலுமே இப்படி ஒரு அதிகாரி இருப்பார்). ஏற்கெனவே நீங்கள் செய்த புகாரின் நகல்களுடன், பத்து ரூபாய் மதிப்பிலான நீதிமன்ற முத்திரை வில்லை ஒன்றை புகாரின் முதல் பக்கத்தில் ஒட்டி அனுப்பினால் போதும்.
இதற்கான பதில் முப்பது நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்றால், அடுத்தாக 'மேல்முறையீட்டு அதிகாரி'க்கு, புகாரை அனுப்பலாம். அதற்கும் பதில் கிடைக்க தாமதமானால் 'இன்ஃபர்மேஷன் கமிஷனர்' (தமிழ்நாடு - சென்னை) அலுவலகத்துக்கு அனுப்பலாம். இந்த நடைமுறைகளில் ஏதாவது ஓர் இடத்திலேயே உரிய தகவல் கிடைத்துவிடும். நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவிடும்.
முதல் தடவை பொதுத் தகவல் அதிகாரிக்கு மனு செய்யும்போது மட்டும் நீதிமன்ற முத்திரை வில்லை ஒட்டினால் போதும். ஒவ்வொரு முறை அனுப்பும் கடிதங்களின் நகல் மற்றும் அனுப்பியதற்கான அத்தாட்சி ஆகியவற்றை நகல் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கடிதங்களை பதிவுத் தபாலில் அனுப்புவது நல்லது.
Post a Comment