சமையல் டிப்ஸ் டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து கொதிக்க விடாதீர்கள் டீயின் சுவை குறைந்து விடும். கீரை மசியல் செய்ய கீரையை கட...
சமையல் டிப்ஸ்
டீ போடும் போது, டீத்தூளுடன் சர்க்கரையை சேர்த்து
கொதிக்க விடாதீர்கள் டீயின் சுவை குறைந்து விடும்.
கீரை மசியல் செய்ய கீரையை கடையும் போது
அதனுடன் கால் ஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கடைய
கீரை தனி சுவையுடன் இருக்கும்.
சோடா உப்பை அடிக்கடி உணவில் சேர்க்காதீர்கள்
வயிற்று உபாதைகளை ஏற்படுத்தக் கூடும்.
ரசம் இறக்கி வைத்ததும், ஒரு துளி நெய் சேர்த்து
பச்சை கொத்தமல்லியை பொடிப் பொடியாக
நறுக்கிப் போடுங்கள் மணமும் ருசியும் எடுப்பாய் இருக்கும்.
சாம்பார் மணக்க வேண்டுமா சாம்பாரை இறக்குவதற்கு
முன், ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன் மல்லி
ஒரு காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொரித்து, சிறிது
கரகரப்பாக அரைத்து கலக்கினால், சாம்பார்
"கம... கம...'வென இருக்கும்.
வெண்டைக்காய் வதக்கும் போது நூல்நூலாக வரும்
அதற்கு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை ஊற்றி
கிளறினால் நூல்நூலாக வராது.
மீன் குழம்பை அடுப்பில் இருந்து இறக்கும் முன்
2சிறிய வெங்காயத்தை தோலுடன் தட்டிப் போட்டு
இறக்கவும் நல்ல மனமாக இருக்கும்
மீன் குழம்பு அடுப்பில் இருந்து இறக்கும் போது வெந்தயம்
பெருங்காயம் இரண்டையும் வருத்து தூள் பண்ணி 1/4 டீஸ் பூண் போட்டு இறக்கினால் நல்ல மனமாக இருக்கும்.
காப்பி மணக்க
வெளியில் வாங்கும் பால் தண்ணீராகத்தான் இருக்கும்.
பால் கெட்டியாகவும், சுவையாகவும் மாறி காப்பி மணக்க
ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் சிறிது ஜவ்வரிசியை முடிந்து,
காய்ச்சும் பாலில் போட்டு விட்டால் அது கரைந்து,
பாலைக் கெட்டியாக்கி காப்பிக்கு சுவையை கூட்டும்
குழந்தைகளின் பால் பட்டில், டம்ளர் இவற்றை கழுவ
புளித்த இட்லி மாவை பயன் படுத்துங்கள். பளபளக்கும்
கெடுதல் கிடையாது.
உளுந்த வடைக்கு சிறிதளவு துவரம் பருப்பு சேர்த்தால்
வடை மெதுவாக இருக்கும். ருசி மாறாது.
நம் சமைக்கும் சமையலில் உப்பு அதிகமாக போட்டுவிட்டால் அதில்
உருளைகிழங்கை கட் பன்னி போட்டால் உப்பை எடுத்து விடும்,
துவரம்பருப்பை வேகவைக்கும் போது சிறிது நல்லெண்ணெய் ஊற்றினால் சீக்கிரம் பருப்பு வெந்துவிடும்.
கடலைபருப்பு,மல்லி,பெருங்காயம்,வெந்தயம்.அரிசி,வற்ற்ல் இவற்றை தனித்தனியாக வருத்து பொடியாக்கி கொள்ளவும்
புளியோதரைக்கான புளிக்கரைசலை செய்யும் போது இந்தப்பொடியை
சேர்க்கவும்.அடுப்பை அனைத்தபின் சேர்க்கவும்.
Post a Comment