கேள்வி பதில்கள்--கணிணிக்குறிப்புக்கள்

கேள்வி: நினைவிற்கு வரும்போதெல் லாம் பெயர்களை வரிசையாக வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி அடித்து வைத்தேன். இவற்றை அகர வரிசைப்படி அடுக்கி வைக்...

கேள்வி: நினைவிற்கு வரும்போதெல் லாம் பெயர்களை வரிசையாக வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி அடித்து வைத்தேன். இவற்றை அகர வரிசைப்படி அடுக்கி வைக்க விரும்புகிறேன். இதற்கு வேர்டில் வசதி தரப்பட்டுள்ளதா? பதில்: மிக எளிதாக இதனை மேற்கொள்ளலாம். இவற்றை எல்லாம் செலக்ட் செய்திடுங்கள். பின் Table மெனு சென்று Sort பிரிவைத் தேர்ந்தெடுங்கள். பின் சார்ட் டயலாக் பாக்ஸ் (Sort Text dialogue window) கிடைக்கும். இதில் கீழிருந்து மேலாக, அதாவது A to Z என்ற வகையில் அடுக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படி தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் லிஸ்ட் பெயர்கள் மாற்றி நீங்கள் தேர்ந்தெடுத்தபடி அடுக்கப்படும். உங்கள் டாகுமெண்ட்டில் இந்த பெயர்கள் மட்டும் இருந்தால் அவற்றைத் தேர்ந்தெடுக்காமலேயே நீங்கள் சார்ட்டிங் வேலைக்கு நேரடியாகச் செல்லலாம். கேள்வி : திரைப்படங்களை விண்டோஸ் மீடியா பிளேயரில் அல்லது வேறு எதில் பார்ப்பது? பதில் : நீங்கள் கூறியபடி விண்டோஸ் மீடியா பிளேயரில் பார்க்கலாம். அல்லது Xing Mpeg player, Irfan view, Winamp போன்ற சாப்ட்வேர் தொகுப்புகள் மூலமாகவும் பார்க்கலாம். கேள்வி பதில்கள் கேள்வி - பதில் 4 1. கேள்வி: வேர்ட் டேபிள் அமைக்கையில் டேபிள் வரிசை தலைப்புகளை அடுத்த பக்கத்தில் வந்தாலும் அமைக்க ஹெடிங் ரோவ்ஸ் ரிபீட் என்ற வசதி உள்ளது. அதற்கு இணையான வசதி எக்ஸெல் தொகுப்பில் உள்ளதா? அது என்ன? பதில்: எக்ஸெல் தொகுப்பிலும் நீங்கள் கேட்கும் வசதி உள்ளது. இதனை கீழ்க்காணும் முறையில் செட் செய்திட வேண்டும். 1. 'File' என்பதைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் 'Page Setup' என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். 2. பல டேப்கள் கொண்ட 'Page Setup' என்ற டயலாக் பாக்ஸ் கிடைக் கும். இதில் “Sheet” என்ற டேபைக் கிளிக் செய்திடவும். 3. ஒவ்வொரு பக்கத்திலும் தலைப்பு உள்ள படுக்கை வரிசை அச்சிடப்பட வேண்டும் என்றால் 'Rows to repeat at top'என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்ப்ரட்ஷீட்டின் மீது கிளிக் செய்திடவும். 'Page Setup Rows to repeat at top' என்னும் புளோட்டிங் டூல் பார் கிடைக் கும். எந்த படுக்கை வரிசையில் உள்ள தலைப்புகள் அச்சிடப்பட வேண்டுமோ அந்த வரிசையினைத் தேர்ந்தெடுக்கவும். வரிசையினைத் தேர்ந்தெடுத்து முடித்த பின்னர் டூல்பாரின் இறுதியில் உள்ள பட்டனைக் கிளிக் செய்திடவும். இதன் பின் அந்த வரிசை டயலாக் பாக்ஸில் தெரியும். 4. இதே போல நெட்டு வரிசையில் உள்ளதுவும் அச்சிடப்பட மீண்டும் என்றால் மீண்டும் சிறிய ஸ்ப்ரட் ஷீட் டைப் பெற்று அதில் 'Columns to repeat at left' என்பதற்கு அடுத்து உள்ள சிறிய ஸ்பிரட்ஷீட்டின் மீது கிளிக் செய்து முன்பு செய்தது போலவே தேர்ந்தெடுத்து அமைத் திடவும். இதில் ஒன்றை மனதில் கொள்ள வேண்டும். நெட்டு வரிசை (column) மற்றும் படுக்கை வரிசை (row) ஆகிய இரண்டினையும் கட்டாயம் அமைத்திட வேண்டும் என்பதில்லை. எது ஒன்று வேண்டும் என்றாலும் அதனை மட்டும் அமைத்திடலாம். 5. இவற்றை எல்லாம் தேர்ந் தெடுத்த பின்னர் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடினால் தேர்ந்தெடுத்தபடி ஒர்க் ஷீட் அச்சிடப்படும்.

Related

கணிணிக்குறிப்புக்கள் 7014813058829694336

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item