கானாடு காத்தான் மீன் குழம்பு......சமையல் குறிப்புகள்
கானாடு காத்தான் மீன் குழம்பு தேவையான பொருட்கள் மீன் - 1/2 கிலோ சாம்பார் வெங்காயம் - 200 கிராம் நாட்டுத் தக்காளி - 200 கிராம் புளி - எலுமிச...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_02.html
கானாடு காத்தான் மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
மீன் - 1/2 கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
நாட்டுத் தக்காளி - 200 கிராம்
புளி - எலுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணை - தேவைக்கேற்ப
அரைக்க
மிளகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/2 மூடி
இஞ்சி - சிறு துண்டு
கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை - தாளிக்க
செய்முறை
* மீனை சுத்தம் செய்து மஞ்சள் தூள், உப்பு தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் மீனைப்போட்டு வறுத்தெடுக்கவும்.
* அரைக்க கொடுத்திருக்கும் பொருட்களை விழுதாக்கி கொள்ளவும்.
* புளியைக் கரைத்துக் கொண்டு அந்த நீரிலேயே மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் தேவைக்கேற்ப உப்பு, அரைத்த மசாலா அனைத்தையும் சேர்க்கவும்.
* எண்ணெயைக் காய வைத்து கடுகு, காய்ந்த மிளகாயை தாளிக்கவும், வெங்காயம், தக்காளியை வதக்கி கரைத்து வைத்த புளிநீரைக் கொதிக்க வைக்கவும். கொதி வெந்தவுடன் மீனைப் போட்டு கிளறி இறக்கி விடவும்.
குறிப்பு
* இந்த மீன் குழம்பு ருசியாக இருக்கும். இதற்கு வெல்லம் தேவையில்லை.
***********************************************************
Post a Comment