கத்திரிக்காய் துவையல் --சமையல் குறிப்புகள்
கத்திரிக்காய் துவையல் தேவையான பொருட்கள் கத்திரிக்காய் – 250 கிராம் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1 தே.கரண்டி கொத்தமல்லி ...

கத்திரிக்காய் துவையல்
தேவையான பொருட்கள்கத்திரிக்காய் – 250 கிராம் வெங்காயம் – 1 பச்சை மிளகாய் – 2 சீரகம் – 1 தே.கரண்டி கொத்தமல்லி – ¼ கப் கருவேப்பில்லை – 4 இலை எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு புளி – சிறிய கோலி அளவு செய்முறை
முதலில் கத்திரிக்காயினை சிறிய சிறிய தூண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சை மிளகாய் , கொத்தமல்லியைம் பொடியாக வெட்டி வைக்க வேண்டும். நாண் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் போட்டு பிறகு வெட்டி வைத்துள்ள கத்திரிக்காய், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பில்லை சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு அத்துடன் சிறிது புளியினை வெட்டி போட வேண்டும். தீயினைக் குறைத்து மூடி வேகவிட வேண்டும். நன்றாக வெந்த பிறகு கரண்டியால் நன்றாக மசித்து அத்துடன் வெங்காயம் சேர்த்து கிளறி பரிமாற வேண்டும்.
கத்திரிக்காய் துவையல் ரெடி.
Post a Comment