காய்கறி கழனி மண்டி....சமையல் குறிப்புகள்
காய்கறி கழனி மண்டி தேவையானவை பலவகைக் காய்கறிகள் - 300 கிராம் அரிசி களைந்த கழனி - 2 கப் தேங்காய் பால் - 1/2 கப் சின்ன வெங்காயம் - 10 பூண்டு...
https://pettagum.blogspot.com/2011/10/blog-post_3104.html
காய்கறி கழனி மண்டி
தேவையானவை
பலவகைக் காய்கறிகள் - 300 கிராம்
அரிசி களைந்த கழனி - 2 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
சின்ன வெங்காயம் - 10
பூண்டு பல் - 10
பச்சைமிளகாய் - 2
கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் - தாளிக்க (தேவையான அளவு)
புளி - எலுமிச்சம்பழ அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
* அரிசி களைந்த தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். வாழைக்காய், அவரைக்காய், கொத்தவரை போன்ற நாட்டுக்காய்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
*வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம் தாளித்து கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயத்தை முழு வெங்காயமாகப் போட வேண்டும்.
* இவை வதங்கியதும் நறுக்கிய பலவகைக் காய்களைச் சேர்த்து நன்றாக கிளறவும். கலவை கலந்த பிறகு அரிசி கழுவிய தண்ணீரை ஊற்றி நன்றாக கிளறி விடவும்.
* புளியைக் கரைத்து ஊற்றி கொதித்ததும், தேவையான உப்பு சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடம் வேக விடவும்.
* வெந்ததும் தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கிவிடவும்.
*******************************************************
Post a Comment