லெட்டூஸ் கீரை ரோல் குழம்பு......சமையல் குறிப்புகள்
லெட்டூஸ் கீரை ரோல் குழம்பு தேவையானவை உருளைக் கிழங்கு - 200 கிராம் சின்ன வெங்காயம் - 50 கிராம் கடலை மாவு - 1/2 கப் மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூ...

https://pettagum.blogspot.com/2011/10/blog-post_6581.html
லெட்டூஸ் கீரை ரோல் குழம்பு
தேவையானவை
உருளைக் கிழங்கு - 200 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கடலை மாவு - 1/2 கப்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கறி மசாலா - 1/4 டீஸ்பூன்
லெட்டூஸ் இலை - 15
குழம்பிற்கு - தேவையானவை
புளி - சிறு உருண்டை
தேங்காய் துருவல் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்
பட்டை கிராம்பு - சிறிதளவு
உப்பு எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு கட்டி இல்லாமல் மசிக்கவும். அத்துடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கடலை மாவு, மிளகாய்த்தூள், கறிமசாலா, உப்பு சேர்த்து தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையவும்.
* லெட்டூஸ் கீரையை நடுவில் உள்ள காம்பை நீக்கி 2 துண்டுகளாக்கவும் இந்த பாதி லெட்டூஸ் இலை மேல் மாவுக்கலவையை வைத்து ரோலாக சுருட்டி வைக்கவும்.
* இப்படி மாவு அனைத்தையும் லெட்டூசில் ரோல் செய்து இட்லி தட்டில் வைத்து இட்லி அவிப்பதுபோல அவித்து எடுக்கவும்.
* புளியை ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும். தேங்காய், வெங்காயம், சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
* தக்காளி சேர்த்து வதக்கவும், அரைத்த தேங்காய் மசாலாவை இத்துடன் சேர்த்து வதக்கி, புளித் தண்ணீர், உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, 1 கப் தண்ணீர் விட்டு பொடி வாசனை போக கொதிக்க விடவும்.
* குழம்பு நன்றாக கொதித்ததும் வேக வைத்த லெட்டூஸ் கீரை ரோலைப் போட்டு மூடி வைத்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.
Post a Comment