உடல் எடை கூட... உணவோடு வெண்ணெய்!

வெ ண்ணெய் என்றதுமே, வெண்ணெயைத் திருடித் தின்னும் கண்ணனின் ஞாபகம்தான் கண்முன் தோன்றும். கறந்த பாலை காய்ச்சி, உறையவைத்து எடுத்து, அதில் கடைந...

வெண்ணெய் என்றதுமே, வெண்ணெயைத் திருடித் தின்னும் கண்ணனின் ஞாபகம்தான் கண்முன் தோன்றும். கறந்த பாலை காய்ச்சி, உறையவைத்து எடுத்து, அதில் கடைந்த வெண்ணெயை குழந்தைகளின் கை நிறைய அப்பிய காலம் மலையேறிவிட்டது. இன்றோ, எப்போதும் சாக்லேட் பார்களையும், சிப்ஸ் வகைகளையும் கையில் வைத்து சுழலும் சுட்டீஸ்களைத்தான் அதிகம் பார்க்க முடிகிறது. வளர்ந்துவிட்ட ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்தில் பல பாரம்பரிய உணவு முறைகளைத் தொலைத்து விட்டோம்.
வெண்ணெயில் உள்ள சத்துக்கள் குறித்தும் அதன் நன்மை, தீமைகள் குறித்தும் டயட்டீஷியன் மற்றும் பால் ஆலோசகர் மயூரியிடம் கேட்டோம்.
'வெண்ணெயில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?'
'கொழுப்புச் சத்து மட்டும்தான் அதிகம் உள்ளது. தவிர, 'வைட்டமின் ஏ’ உள்ளது. இது கண்ணுக்கு மிகவும் நல்லது. புரதம், கார்போஹைட்ரேட், மாவுச் சத்து போன்ற வேறு எந்தச் சத்துகளும் இதில் இல்லை.'
'குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா? எப்போது கொடுக்கலாம்?'
'வளரும் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம். குறிப்பிட்ட வயதில் சரியான எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளுக்கு வெண்ணெயை உணவுடன் சேர்த்துக் கொடுத்தால், உடல் புஷ்டியாகும். அதாவது, நான்கு வயதில் ஒரு குழந்தை 18 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் சில குழந்தைகளுக்கு வயது கூடக்கூட எடை குறையும். இதுபோன்ற நேரத்தில் அந்தக் குழந்தைகளுக்கு வெண்ணெயைக் கொடுக்கலாம். பொதுவாகக் காலை நேரங்களில் சாப்பிடலாம். மாலை, இரவு வேளைகளில் சிறிதளவு கொடுக்கலாம்.'
'யாரெல்லாம் எடுத்துக்கொள்ளலாம்?'
'விளையாட்டு வீரர்கள், உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் வெண்ணெயை உணவுடன் அவ்வப்போது சேர்த்துக்கொள்ளலாம். காசநோய் உள்ளவர்களுக்கும் நல்லது. இது அதிக நேரத்துக்கு உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். உடல் எடை குறைவான டீன் ஏஜ் இளைஞர்களும் ஓரளவுக்கு வெண்ணெய் சேர்த்துக் கொள்வது நல்லது.'
'யாரெல்லாம் தவிர்க்கலாம்?'
'40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதயநோய், உடல் பருமன் இல்லாமல் இருந்தால் ஓரளவு எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள், வெண்ணெய் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது.  வெண்ணெயில் உள்ள கலோரிகள் எளிதில் கரையாது. மேலும் சர்க்கரை நோயாளிகள், இதயம் சார்ந்த பிரச்னை உள்ளவர்கள், உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் வெண்ணெயை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உடலில் கொழுப்பின் அளவும், சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடல் எடை அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு வெண்ணெய் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இதில் உள்ள கொழுப்புச் சத்து மேலும் எடையைக் கூட்டிவிடும்.'
'வெண்ணெய் நல்லதா? அல்லது வெண்ணெயை உருக்கி வரும் நெய் நல்லதா?'
'வெண்ணெயைக் காட்டிலும் நெய் மிகவும் நல்லது. சின்னக் குழந்தைகளுக்கு வெண்ணெயை வாரத்துக்கு மூன்று முதல் நான்கு நாட்கள் வரையிலும், தினமும் ஐந்து முதல் பத்து கிராம் வரை சேர்த்துக்கொடுக்கலாம்.  வளரும் குழந்தைகள் தினமும் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்க்கலாம். சூடான சிற்றுண்டிகளில் நெய் பயன்படுத்தினால், வாசனை ஊரைத் தூக்கும், சாப்பிடவும் தூண்டும். உடல் வெப்பத்தைக் குறைக்கும்.'
'எந்த வகை உணவுப் பொருட்களில் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது?'
'பெரும்பாலும் வெண்ணெயை பிரெட் மீது தடவியே பயன்படுத்துவோம். இது குழந்தைகளுக்கு மட்டுமின்றி நமக்கே சில வேளைகளில் சலிப்பைத் தரும். எனவே, சர்க்கரை பொங்கல், சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுடன் சிறிதளவு சேர்ப்பது சுவையைக் கூட்டும். சூடான சாம்பாரில் சேர்த்து சாப்பிடலாம். தோசை சுடும்போது வெண்ணெய் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.'
'வெண்ணெய் அதிகம் சேர்த்தால் என்ன பாதிப்பு ஏற்படும்?'
'பசி எடுக்கும் தன்மையைக் குறைத்துவிடும். அதிகமாக வெண்ணெய் பயன்படுத்துவதால் இதயம் சார்ந்த நோய்கள், சர்க்கரை நோய் போன்றவை தொடர்வது மட்டுமின்றி, உடல் பருமன் கூடி, குண்டான உடல் தோற்றத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.ஆகவே, கவனம் தேவை!'

Related

உணவே மருந்து 4255888575627794788

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item