அழகு, ஆபரணம், பட்டுச் சேலை க்கான வி.ஐ.பி. டிப்ஸ்!
பட்டு * பட்டுச் சேலையில் தவிர்க்க முடியாமல் எண்ணெய் பட நேரிடு வது சகஜம். உடனே கறைபடிந்த இடத்தின் மீது டால்கம் பவுடரை போட்டு, ப...
பட்டு
* பட்டுச் சேலையில் தவிர்க்க முடியாமல் எண்ணெய் பட நேரிடு வது சகஜம். உடனே கறைபடிந்த இடத்தின் மீது டால்கம் பவுடரை போட்டு, பிறகு ஷாம்பு அல்லது பூந்திக்கொட்டை போட்டு ‘வாஷ்’ செய்தால் எண்ணெய்க் கறை காணாமல் போய்விடும்.
அழகு
* ஷாம்புவால் முடி உதிர்வதைத் தவிர்க்க - செம்பருத்தி இலை, சிறிதளவு மருதாணி இலை, கறி வேப்பிலை, தேங்காய்ப்பால், ஊற வைத்த வெந்தயம் ஆகியவற்றை தலைக்குத் தேய்த்தால் முடி கொட்டாது. புசுபுசுவென்று இருக்கும்.
* முகம் பளபளப்பாகவும் சிவப்பாகவும் இருக்க வேண்டுமா? தக்காளி, தயிர், கடலை மாவு ஆகியவற்றோடு, சந்தனத்தையும் சேர்த்து முகத்தில் பூசி, 15 நிமிடம் கழித்து கழுவினால், முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
* இரவில் உறங்கச் செல்லும் முன் ஆலிவ் ஆயிலை முகத்தில் தேய்த்துப் படுத்தால் சரும வறட்சி நீங்கி முகம் பொலிவடையும்.
* பல்லின் மஞ்சள் நிறம் நீங்க, சாதா ரண டேபிள் சால்ட் உபயோகித்து பல் தேய்த்தால் போதும், பற்கள் பளிச்சிடும்!
ஆபரணம்
* தங்க வளையல், செயின், மோதிரம் போன்றவற்றை காட்டனில் சுருட்டி வைத்தால், புது மெருகோடு இருக்கும்.
Post a Comment