முருங்கைக்கீரை குழந்தையின்மை குறை போக்கும்!
மு ருங்கைக்கீரையில் வைட்டமின் உயிர்ச் சத்துகள் அதிக அளவில் உள்ளன. அன்றாட உணவில் முருங்கைக்கீரை, முருங்கைப்பூ அல்லது முருங்கை ஈர்க்கு போ...
குழந்தை பெற்ற தாய்மார்கள்... வாயுவை உண்டுபண்ணக்கூடிய உணவுகளையோ, எளிதில் ஜீரணமாகாத உணவுகளையோ உண்ணும் போது பால் குடிக்கும் குழந்தைகளையும் அது பாதிக்க வாய்ப்புள்ளது. அதாவது, ஜீரண சக்தி குறைந்த - வாய்வு நிறைந்த பாலை அருந்தும் குழந்தைக்கு வயிறு உப்புசம், கல் போன்ற வீக்கம், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது, அப்படிப்பட்ட நேரங்களில் கைப்பிடி அளவு முருங்கைக்கீரையை எடுத்து கசக்கி சாறு எடுத்து, வடிகட்டி அதே அளவு கல் உப்பு சேர்த்துக் கரைத்து வெந்நீர் சேர்த்து பாலாடை அளவு குழந்தைக்கு குடிக்க கொடுக்க வேண்டும். குழந்தைக்குப் பிரச்னை அதிகமாக இருந்தால், முருங்கைக்கீரை சாற்றுடன் வசம்புத்தூளை சேர்த்துக் கலக்கி குழந்தையின் தொப்புளைச்சுற்றி பற்று போடுவதன்மூலமும் நிவாரணம் பெறலாம்.
சிறுநீர் கழிக்க முடியாமல் நீர்க்கட்டினால் பாதிப்புக்குள்ளாகும் சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லோருமே முருங்கைக்கீரையுடன் வெள்ளரி விதை சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து தொப்புளில் பற்று போட்டால் நீர்க்கட்டு உடைந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.
மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் பகல் வேளைகளில் முருங்கைக்கீரையை பொரியலாகவோ, சூப்பாகவோ செய்து சாப்பிட்டால் மறுநாள் முழுநிவாரணம் பெறலாம். முருங்கைக்கீரை மட்டுமல்லாமல் முருங்கை ஈர்க்குகளை (இலையை ஒட்டியிருக்கும் காம்புகள்) ரசம் அல்லது சூப் வைத்து சாப்பிட்டாலும் மலச்சிக்கல் பிரச்னையில் இருந்து நிவாரணம் பெறலாம். மேலும், பொதுவாக வாரம் ஒருநாள் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை என சாப்பிட்டு வந்தாலே மலச்சிக்கலில் இருந்து விடுதலை பெறலாம்.
குழந்தையின்மை, ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் முருங்கைக்கீரையை சமைத்து உண்பதோடு முருங்கைக்காயின் இளம்பிஞ்சுகளை பாலில் வேகவைத்து சாப்பிடுவதன்மூலம் குணம் பெறலாம். முருங்கைப்பூக்களை பாலில் வேகவைத்து சாப்பிடுவது மற்றும் முருங்கைப்பூ பொரியல் சாப்பிடுவதன்மூலமும் மலட்டுத்தன்மையில் இருந்து நிவாரணம் பெறலாம்.
Post a Comment