பாசிப்பருப்பு தால் - சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு - 200 கிராம் வெங்காயம் - 200 கிராம் பெரிய தக்காளி - 2 (அ) 3 பச்சை மிளகாய் - 6 கடுகு - 1/2 தேக்கரண்டி மஞ்சள...
https://pettagum.blogspot.com/2012/04/blog-post_13.html
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 200 கிராம்
வெங்காயம் - 200 கிராம்
பெரிய தக்காளி - 2 (அ) 3
பச்சை மிளகாய் - 6
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - தேவையான அளவு
பெருங்காயப் பொடி - 1/2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
செய்முறை :
பருப்பை குழைய வேக வைக்கவும். குக்கரில் வேக வைக்க வேண்டாம். பிசின்போல் ஆகிவிடும். அடி கனமான பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, பருப்பைக் கழுவிப் போட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கவும். இண்டாலியம் சட்டியில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கி, வேக வைத்து பருப்பில் போட்டு உப்பு, மஞ்சள் தூள் கலக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கி பருப்பில் போட்டு வேக வைக்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும், மீதி உள்ள எண்ணெய்யில் கடுகு, மிளகாய் வற்றல், பெருங்காயம் தாளித்துப் பரிமாறவும். இந்த தால் சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். பருப்பை இறக்கி வைத்து ஓர் எலுமிச்சம் பாம் பிழித்து சாப்பிடலாம்.

Post a Comment