பொட்டுக்கடலை வடை---சமையல் குறிப்புகள்,
பொட்டுக்கடலை வடை தேவையானவை: பொட்டுக்கடலை - ஒரு கப், கடலை மாவு - அரை கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், தேங...
https://pettagum.blogspot.com/2012/04/8-4.html
பொட்டுக்கடலை வடை
தேவையானவை: பொட்டுக்கடலை - ஒரு கப், கடலை மாவு - அரை கப், சோம்பு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 8, கசகசா - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் பொட்டுக்கடலையை லேசாக வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் போட்டு கரகரப்பாக பொடிக்கவும். தேங்காய் துருவல், கசகசா, முந்திரிப் பருப்பு, சோம்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, மையாக அரைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பொட்டுக்கடலைப் பொடி, கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து வடை மாவு பதத் தில் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்து வைத்திருக்கும் மாவை வடைகளாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னியுடன் சூடாக பரிமாறவும்

Post a Comment