சப்ஜி - சமையல் குறிப்புகள்,
தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 200 கிராம் வெங்காயம் - 300 கிராம் பூண்டு பெரிய பல் - 6 எண்ணெய் - 6 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி - 2 தேக்கர...

https://pettagum.blogspot.com/2012/04/blog-post_1122.html
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 200 கிராம்
வெங்காயம் - 300 கிராம்
பூண்டு பெரிய பல் - 6
எண்ணெய் - 6 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - 2 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 5 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி
மல்லி இலை, உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கிழங்கை வேக வைத்து தோல் உரித்து சின்னத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பூண்டை உரித்து அரைக்கவும். அரைத்த விழுதுடன் மற்ற பொடிகளையும் கலக்கவும். இண்டாலியம் சட்டியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் அரைத்ததை விட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கொதித்ததும் உப்பு, வேகவைத்த கிழங்கு இரண்டையும் கலந்து கொதிக்க வைத்து, எண்ணெய் தெளிந்து வந்ததும் இறக்கி வைத்து மல்லி இலையை பொடியாக நறுக்கிப் போடவும். பூண்டுடன் கொஞ்சம் தேங்காய் துருவல் சேர்த்து அரைக்கலாம். உருளை கிழங்குடன், பீன்ஸ, காரட், பட்டாணி வேகவைத்துப் போடலாம். இந்த சப்ஜியை சப்பாத்தி, பூரி, தோசை இவைகளுடன் சாப்பிடலாம்.

Post a Comment