வைத்தியம் - கருகரு கூந்தலுக்கு... கொட்டைக்கரந்தை!
க ரந்தைப்பூ... சிவகரந்தை, கொட்டைக்கரந்தை, செங்கரந்தை, கருங்கரந்தை, நாறும்கரந்தை, குத்துக்கரந்தை, சிறுகரந்தை, சுனைக்கரந்தை, சூரியக்கரந்தை,...
கொட்டைக்கரந்தை செடிகள் பூப்பூப்பதற்கு முன்பாக அவற்றைப் பிடுங்கி, நிழலில் உலரவைத்துப் பொடியாக்கி, ஐந்து கிராம் அளவுக்கு எடுத்து, கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், உள்ரணம் மற்றும் தோல் நோய்கள் சரியாகும். இதே பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் அளவுக்கு எடுத்து, பால், கற்கண்டுடன் சேர்த்துத் தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை இரவில் சாப்பிட்டு வந்தால் நரம்புகள் பலப்படும். தினமும் ஒன்று முதல் இரண்டு கிராம் அளவு எடுத்துத் தேனுடன் சேர்த்துச் சாப்பிட, நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிப்பதோடு பார்வைத்திறன் அதிகரிக்கும். கொட்டைக்கரந்தைப் பொடியுடன் அதே அளவு கரிசலாங்கண்ணிப் பொடியைச் சேர்த்துத் தேனுடன் குழைத்துச் சாப்பிட்டுவந்தால், இளநரை விலகுவதோடு உடல் பலம்பெறும். உடல் உறுப்புகளுக்கு வலிமை தரும் இந்த மூலிகை, பல்வேறு மருத்துவத்துக்கும் பயன்படுகிறது. கொட்டைக்கரந்தையின் பட்டையை அரைத்து மோருடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம் குணமாகும்.
தோல் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் இதன் இலை களைக் காயவைத்துப் பொடியாக்கி ஒரு வேளைக்கு அரை டீஸ்பூன் வீதம் தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கொட்டைக்கரந்தை இலைச்சாற்றுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி, தலைக்குத் தேய்த்து வந்தால் கூந்தல் கருகருவென வளரும்.
கொட்டைக்கரந்தையின் முழுச்செடியை கஷாயமாக்கி, அதனுடன் சீரகத்தைப் பொடித்துப்போட்டுச் சாப்பிட்டு வந்தால், வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
Post a Comment