உலக பூமி தினம் (WorldEarthDay) ! பூமியைக் காக்க உங்களால் இந்த 8 விஷயங்களை செய்ய முடியும்..!
Go Green கான்செப்ட் என்றதும் பலரும் பயந்து நடுங்குவதை பார்த்திருப்போம். உண்மையில் அது அவ்வளவு சிரமமா? நிச்சயம் இல்லை. இந்த எட்டு விஷயங்கள...

- முதல் முக்கியமான விஷயம் தண்ணீர்தான். காலையில் பல் துலக்கும்போது தண்ணீரை எப்படி பயன்படுத்துவீர்கள்? குழாயில் இருந்து தண்ணீரை கைகளால் பிடிப்பேன் என்றால், அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஒரு மக்-ல் தண்ணீர் பிடித்து பயன்படுத்தினால் நீங்கள் இந்தப் பூமிக்கு நன்மை செய்கிறீர்கள். அந்தத் தண்ணீரால் என்ன நன்மை நடக்கும் என்பவர்கள் அந்நியன் படத்தில் சுஜாதா சொன்ன “அஞ்சு பைசா திருடினா தப்பா” என்ற வசனத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.
- பக்கத்தில் இருக்கும் கடைக்கு பைக் எடுத்துச் செல்வதை தவிருங்கள். வாரத்தில் ஒருநாள் பேருந்தில் அலுவலகம் செல்லுங்கள். மாதம் 2 லிட்டர் பெட்ரோல் ஒருவர் குறைவாக பயன்படுத்தினால் ஒரே மாதத்தில் எத்தனை கோடி லிட்டர் மிச்சம் ஆகும் என யோசியுங்கள்
- உங்கள் அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர்? தினமும் எவ்வளவு காகிதம் பயன்படுத்தப்படுகிறது? அதில் எத்தனை மறுசுழற்சிக்கு உள்ளாக்க முடியும்? ஒரு பக்கம் மட்டுமே அச்சடிக்கப்பட்ட காகிதங்களை, மீண்டும் பயன்படுத்த முடியாதா? உங்களால் முடியும் பாஸ்.
- உங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை எது, மக்கா குப்பை எது என பிரித்து வைக்கும் பழக்கம் உண்டா? உடனே செய்யுங்கள். அதுவே ஒரு பேருதவி.
- தலையை தூக்கி கொஞ்சம் பாருங்கள். உங்கள் வீட்டிலோ , அலுவலகத்திலோ என்ன மாதிரியான விளக்குகள் இருக்கின்றன? குண்டு பல்பு இருந்தால் சிக்கனம் பார்க்காமல் உடைத்து விடுங்கள். சி.எஃப். எல் விளக்குகள் சாதாரண விளக்குகளை விட 10 மடங்கு அதிகமாக உழைக்கும். குறைந்த மின்சாரத்தையே எடுத்துக்கொள்ளும்.
- சக்தியை மிச்சப்படுத்துங்கள். வீட்டில் இருக்கும் போது தேவையற்ற மின்விசிறி, விளக்குகள் எரிவதை குறைக்கலாம். குளிர்சாதன பெட்டியின் ஃபில்டர்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். அதுவும் சக்தியை மிச்சப்படுத்தும். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனி அறையும் தூங்கும் பழக்கம் இருந்தால், அதையும் வாரம் இரண்டு நாட்கள் தவிர்க்கலாம். ஏ.சி.என்பது ஓர் அறையை குளிர்வித்து, இந்த பூமியையை சூடாக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
- உங்கள் வாகனங்களின் டயர்களை சரியாக பரமாரிப்பதும் பூமிக்கு செய்யும் நல்லதுதான். எப்படி? காற்றழுத்தம் குறைவாக இருக்கும் வாகனங்கள் 20% வரை அதிக எரிபொருளை வீணாக்கும். அவற்றை சரியாக வைத்திருப்பதன் மூலம் நமக்கும் பணம் மிச்சம். பூமிக்கும் குறைந்த சேதாரம். போலவே, அதிக வேகத்தை தவிர்க்கலாம். 60-70 கிமீ / ஒரு மணி நேரம் என்பதை மந்திரமாக கொள்ளுங்கள்.
- திடக்கழிவுகள் தான் பூமியின் பெரும்பாலான இடத்தை ஆக்ரமித்திருக்கிறன. கடலை நாசம் செய்கின்றன. இந்தப் பூமியை மாசுபடுத்துக்கின்றன. ஒவ்வொரு தனி நபரும் உருவாக்கும் கழிவுகளை குறைக்கலாம். அதுவும் கோ க்ரீன் வாழ்வுதான்.
Post a Comment