வாதரக்தம் எனும் மூட்டுவலி, மூட்டில் வீக்கமும் எரிச்சலும் உபாதை!

  வாதரக்தம் எனும் மூட்டு வலி, மூட்டில் வீக்கமும் எரிச்சலும் உபாதை! By டாக்டர் எஸ். சுவாமிநாதன் என்னுடைய முழங்கால் மூட்டில் ...

 

வாதரக்தம் எனும் மூட்டுவலி, மூட்டில் வீக்கமும் எரிச்சலும் உபாதை!

By டாக்டர் எஸ். சுவாமிநாதன்
என்னுடைய முழங்கால் மூட்டில் வீக்கமும் எரிச்சலும் உள்ளது. தொட்டால் சூடாகவும் வலியும் ஏற்படுகிறது. தாங்கி தாங்கித்தான் நடக்க முடிகிறது. இது எதனால்? இதற்கு மருந்து உள்ளதா?
-தங்கமணி, ஓசூர்.

உணவில் உப்பு, புளிப்பு, காரம் சேர்ந்தவற்றை அதிகம் உண்பதாலும், வினிகர், எண்ணெய் மற்றும் மிகவும் சூடான வீர்யம் கொண்ட ஊறுகாயை அதிக அளவில் சாப்பிடுவதாலும், முன் உண்ட உணவு முழுவதும் செரித்திருக்காத நிலையில், அடுத்த உணவை உண்பதாலும், உட்புற நொதநொதப்பை ஏற்படுத்துவதும், மிகவும் வறண்டதுமாகிய நீர்வாழ் பிராணிகள், எள், புண்ணாக்கு, முள்ளங்கி, கொள்ளு, உளுந்து, பட்டாணி, இலைக்கறிகாய்கள், மாமிசச்சூப்பு, கரும்புச்சாறு கொண்டு தயாரிக்கப்படும் இனிப்புகள், தயிர், மிகவும் புளித்துப்போன கள், சாராயம், மோர், ஒவ்வாமை உணவுகள், தன் அளவிற்கு மீறிய உணவு, அடிக்கடி கோபம், பகல் தூக்கம், இரவில் கண்விழித்தல், மிக மென்மையான உடல் அமைப்பு, நேரம் தவறி உண்ணுதல், இயற்கையை மீறிய வாழ்க்கை முறை, உடல் பருமன், சுகமான வாழ்க்கை போன்ற காரணங்களால் நீங்கள் குறிப்பிடும் வாதரக்தம் எனும் உபாதை, மனிதர்களைத் தாக்கக் கூடும் என்று சரகர் என்ற முனிவரும், ஸுஸ்ருதர் எனும் முனிவரும் கூறுகின்றனர்.

மேற்குறிப்பிட்ட உணவு வகைகளால், வயிற்றில் உணவானது புளிப்புடன் கூடிய பதனழிந்த நிலையை அடைந்து, இரத்தத்துடன் அதன் சத்து கலக்கும் போது, இரத்தமும் புளிப்புடன் கூடிய காந்தல் போன்ற நிலையை அடைந்துவிடுகிறது. வாகனங்களில் ஏறி, நின்று கொண்டோ, முட்டியை மடக்கிக் கொண்டோ, வெகுதூரம் பயணம் செய்கையில் இரத்தம் கால் பகுதியில் அதிலும் முக்கியமாக மூட்டுப் பகுதியில் சஞ்சரிக்கும் போது வாயுவுடன் சேர்ந்து, வீக்கம், எரிச்சல், வலி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.

வியர்வை அல்லது வியர்வையின்மை, கருமையடைந்த தோல்நிறம், தொடு உணர்ச்சியின்மை, சிறிய அடிபட்டாலும் கடுமையான வலி, பூட்டுகள் கலகலத்துவிடுதல், அலுப்பு, சலிப்பு, நீர்க்கொப்புளம், முட்டி, முட்டியின் கீழ் கெண்டை சதை, தொடை, இடுப்பு, கை-முதுகுப்பகுதி இணைப்பு, பாதம், மூட்டுகள் ஆகிய பகுதிகளில் ஊசியால் குத்துவது போன்ற வலி, துடிப்பு, பிளப்பது போன்ற வலி, கனம், மரத்துப்போகுதல், அரிப்பு, பூட்டுகளில் வலி திடீரென்று தோன்றுவதும், மறைவதும், கருப்பு நிறத்தில் உடலில் வட்ட வட்டமான தடிப்புகள் தோன்றுவதும் இந்த உபாதைக்கான முன் அறிகுறிகளாகும்.

இரத்தம் கெட்டுப்போய் ஏற்பட்ட உபாதை என்பதால், உடலில் நெய்ப்பு தரும் சிகிச்சை முறைகளை முதலில் செய்து, பிறகு சிறிது சிறிதாக, கெட்ட ரத்தத்தை அட்டைப் பூச்சி வைத்து கடிக்க வைத்து வெளியேற்றும் சிகிச்சை முறையை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. வாயுவின் சீற்றம் அதிகரிக்காத வகையில், இந்த சிகிச்சையைக் கையாள வேண்டும்.

தசமூலம் கஷாயம், பிருகத்யாதி கஷாயம், பலாகுடூச்யாதி கஷாயம், கோகிலாக்ஷம் கஷாயம் போன்றவை, இந்த உபாதைக்கு நல்ல பலன்களைத் தரக்கூடிய மருந்துகளாகும்.

ஜடாமயாதி எனும் பற்றுபோடும் மருந்தை, வடித்த கஞ்சியுடன் குழைத்து முட்டியில் பற்றுப் போடுவதால் எரிச்சலும், வீக்கமும் வலியும் பெருமளவு குறையும்.

சதகுப்பையை பாலில் அரைத்து இளஞ்சூடாகப் பற்று இடுவதும் நல்லதே. பிண்ட தைலம், இந்த உபாதைக்கு பயன்படுத்தும் சிறந்த தைலமாகும். வெதுவெதுப்பாக முட்டியில் வைத்து கட்டிக் கொள்வதால், வீக்கம், எரிச்சல், வலி ஆகியவை குறையும்.

நீர்முள்ளியின் இலையைச் சமைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாதரக்தம் எனும் உபாதையை நாம் வென்று விட முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
(தொடரும்)

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்,
ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5784535019470078010

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item