பணம், உங்கள் பலம்! எந்தத் தேவைக்கு, எந்த முதலீடு..?
பணம், உங்கள் பலம்! எந்தத் தேவைக்கு, எந்த முதலீடு..? க டந்த இதழ்களில் முதலீட்டை ஆரம்பிக்கும் முன் எ...

குடும்ப பாகப் பிரிவினையின்போது, சித்ரா, நதியா இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தது. அவர்கள் பங்குச் சந்தை முதலீடு மூலம் அதிக லாபம் சம்பாதிக்க முடியும் என குடும்ப நண்பர் ஒருவர் மூலம் அறிந்தனர். அந்த வகையில் ஆளுக்கு ஒரு லட்சம் ரூபாயை பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர்.
ஓராண்டு கழித்து நதியா தன் மகளின் திருமணச் செலவுக்காக பங்குகளை விற்றபோது, அதிர்ச்சியானார். காரணம், அவர் வாங்கியிருந்த பங்கின் விலை 20% இறங்கி இருந்தது. அந்தப் பங்குகளை விற்றால் 80,000 ரூபாய்தான் கிடைக்கும். வேறு வழி இல்லாமல், நஷ்டத்துக்கு விற்று மகள் திருமணச் செலவுகளை மேற்கொண்டார்.
அப்படி என்றால் பங்குச் சந்தையில் எப்படித்தான் லாபம் பார்க்க வேண்டும் என்கிறீர்களா?
எந்தத் தேவைக்கு எந்த முதலீடு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, பங்குச் சந்தை முதலீடு என்பது குறுகிய காலத்துக்கானது அல்ல. மேலும், எப்போதும் தேவைக்கு போக உள்ள உபரி பணத்தைத்தான் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். நதியா, மகளின் திருமணத்தை ஓராண்டுக்குள் வைத்துக்கொண்டு பங்குச் சந்தையில் முதலீடு செய்தது பெரிய தவறு. அவர் பணம் ஓராண்டுக்குள் திரும்பத் தேவைப்படும் என்கிற பட்சத்தில், ரிஸ்க் இல்லாத வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், லிக்விட் மியூச்சுவல் ஃபண்ட், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொண்டிருக்க வேண்டும்.
எந்தத் தேவைக்கு எந்த முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்பதை அட்டவணையாக மேலே தந்திருக்கிறோம். அதன்படி முதலீடு செய்து லாபம் பார்க்க வாழ்த்துகள்!
Post a Comment