டிப்ஸ்... டிப்ஸ்...டிப்ஸ்... டிப்ஸ்...!
டிப்ஸ்... டிப்ஸ்... க டலை மாவு, சீயக்காய்த்தூள் இரண்டையும் கலந்து... வெள்ளி, பித்தளைப் பாத்திரங்களை...

https://pettagum.blogspot.com/2015/08/blog-post_29.html
டிப்ஸ்... டிப்ஸ்...
கடலை மாவு, சீயக்காய்த்தூள் இரண்டையும் கலந்து... வெள்ளி, பித்தளைப் பாத்திரங்களைத் துலக்கினால், அவை பளபளக்கும்!
தேங்காயும்
பருப்பும் இல்லாமல் ஒரு `திடீர் கூட்டு’ செய்யலாமா..? ஒரு டம்ளர் பாலில் 3
ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் பொடித்த சீரகம்,
அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், கால் ஸ்பூன் மஞ்சள்தூள், சிறிது
பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். இந்தக் கலவையை
வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து கொதிக்கவிட்டு,... கடுகு, கறிவேப்பிலை,
உளுத்தம்பருப்பு தாளித்தால், சுவையான கூட்டு தயார்!
பகளாபாத் தயாரிக்க சாதம் வேகவைக்கும்போது, ஒரு ஆழாக்கு அரிசிக்கு ஒரு டேபிள்ஸ்பூன் ஜவ்வரிசி வீதம் கலந்தால் சாதம் குழைவாக இருக்கும்.
சரியாக லட்டு
பிடிக்க வரவில்லையா..? சிறிதளவு கோவாவை பூந்தியில் சூட்டோடு கலந்து
பிடித்தால், லட்டு அருமையாக வரும். பால் சுவையுடன் லட்டு மேலும் ருசியாக
இருக்கும்.
குத்துவிளக்கை
முதலில் பழைய செய்தித்தாளால் துடைத்து, பிறகு புளி, உப்பால் தேய்த்துக்
கழுவினால், எண்ணெய்ப்பிசுக்கு நீங்கி `பளிச்’ என்று ஆகிவிடும்.
பூரிக்கு கோதுமை
மாவைப் பிசையும்போது, ஒரு டேபிள்ஸ்பூன் சோயா மாவு, அரை டீஸ்பூன் சர்க்கரை
சேர்த்துப் பிசைந்தால், ஹோட்டல் பூரி மாதிரி உப்பலாக வரும்.
ரவா தோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்துச் செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென இருக்கும்.
பொரித்த
அப்பளங்கள் நமர்த்துப் போய்விட்டால், அவற்றைத் துண்டுகளாக்கி வெறும்
வாணலியில் வறுத்து... சிறிதளவு தேங்காய், புளி, பச்சை மிளகாய், உப்பு,
கறிவேப்பிலை சேர்த்து, தண்ணீர் தெளித்து அரைத்தால்... சுவையான அப்பளத்
துவையல் தயார்!
சர்க்கரைவள்ளிக்
கிழங்கை மண்போக கழுவி, தோல் சீவி துருவி, தேவையான சர்க்கரை, சிறிதளவு
ஏலக்காய்த்தூள், வெனிலா எசன்ஸ் சேர்த்து சின்னச் சின்ன கப்புகளில் போட்டு
இட்லி குக்கரில் வேகவைத்து எடுத்தால்... புது வகை ஸ்வீட் ரெடி.
புதினா இலைகளைக் காயவைத்து, உப்பு சேர்த்து பவுடராக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால், பெரும்பாலான பல் உபாதைகள் விலகிவிடும்.
வீட்டில்
உபயோகப்படுத்தும் கத்தி, அரிவாள்மணைகளில் துருப்பிடித்திருந்தால், அந்த
இடத்தில் செங்கல் பொடியைத் தூவி தேய்க்கலாம். உருளைக்கிழங்கை இரண்டாக
வெட்டி தேய்த்தாலும் துரு போய்விடும்.
ஊறுகாயை பாட்டிலில் போடும் முன்பு பாட்டிலின் உட்புறம் வெதுவெதுப்பான எண்ணெயைத் தடவிவிட்டால், பூஞ்சை ஏற்படாது.
இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, ஒரு ஆரஞ்சு பழத்தின் சாற்றுடன், ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகினால், தூக்கம் நன்றாக வரும்.
உளுந்து
வடைக்கு பருப்பு ஊறவைக்கும்போது, ஒரு பிடி துவரம்பருப்பையும் சேர்த்து
ஊறவைத்தால்... வடை அதிகம் எண்ணெய் குடிக்காது; அதிக நேரம் ருசி மாறாமல்
இருக்கும்.
பாயசம்
நீர்த்துப் போய்விட்டால், கொஞ்சம் பொட்டுக்கடலை மாவை காய்ச்சிய பாலில்
கரைத்துச் சேர்த்தால் போதும். பாயசம் பதமாவதுடன், சுவையும் கூடும்.
Post a Comment