கேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்!

கேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்! வீ ட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு தொடர்பான பாதுகாப்பு ...

கேஸ் சேஃப்டி டிவைஸ்... கிச்சனின் காவலன்!
வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயு தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார், ‘கேஸ் சேஃப் இந்தியா பப்ளிக் லிமிடெட்’-ன் சென்னை டீலர் தினேஷ்.
“கேஸ் சிலிண்டர் வெடிக்க என்ன காரணம்?’’
‘‘90% சிலிண்டர் விபத்துகள் கேஸ் லீக் ஆவதால்தான் ஏற்படுகின்றன. எனவே, கேஸ் லீக்கேஜுக்கான வாய்ப்பில்லாமல் கவனமாக இருக்க வேண்டும். கேஸ் லீக்கேஜை உணர்ந்தால், துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’
‘‘கேஸ் சிலிண்டரை கையாளும் முறைகள் பற்றி...’’
‘‘சிலிண்டரை எப்போதும் நிமிர்த்தியே வைத்திருக்க வேண்டும்; படுத்த நிலையில் வைக்கக் கூடாது. மேலும், சிலிண்டர் வைக்கும் இடத்தில் பாத்திரம் பண்டம், தேவையற்ற பொருட்களை நிரப்பி வைப்பது என்று நெருக்கடியை ஏற்படுத்தக்கூடாது. சிலிண்டரைவிட அடுப்பு சற்று உயரமான இடத்தில் இருப்பதுடன், சிலிண்டரையும், அடுப்பையும் இணைக்கும் ரப்பர் டியூப் வெடிப்பு, விரிசல் போன்ற பழுதின்றி இருக்க வேண்டியது அவசியம். எப்போதுமே ஐ.எஸ்.ஐ முத்திரை பெற்ற அடுப்பு, டியூப், லைட்டர் போன்றவற்றையே பயன்படுத்த வேண்டும்.’’
‘‘சிலிண்டரையும் அடுப்பையும் இணைக்கும் ரப்பர் குழாயை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?’’
‘‘க்ரீன் ஃபிளெக்ஸிபிள் டியூப் என்றால் 6 மாதம் முதல் 1 வருடத்துக்கு ஒருமுறை மாற்றலாம். ஆரஞ்ச் சுரக்‌ஷா டியூப் என்றால் 1 முதல் 1.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றலாம். இடைப்பட்ட காலத்தில் விரிசல் ஏற்பட்டால், உடனடியாக மாற்றிவிட வேண்டும்.’’
‘‘சமையல் அறையில் அதிக மின்சாரம் இழுக்கும் ஃப்ரிட்ஜ் போன்ற உபகரணங்களை வைக்கலாமா?’’
‘‘அதை அந்த மின்சார சப்ளையை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். எனினும், அடுப்புக்கு மிக அருகில் எலெக்ட்ரிக் பொருட்களை வைப்பது எப்போதுமே தவிர்க்கப்பட வேண்டிய விஷயம்.’’
‘‘சிலிண்டர் வைத்திருக்கும் இடத்தை கதவு போட்டு மூடி வைக்கலாமா?’’
‘‘கூடாது. கேஸ் லீக் ஆனால் அது வெளியே தெரிவதற்கான வாய்ப்பை இது குறைக்கும் என்பதால், எப்போதுமே சிலிண்டரை கண்பார்வையில், காற்றடைக் காத வகையிலேயே வைத் திருக்க வேண்டும்.’’
‘‘கேஸ் லீக் ஆவது தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?’’
‘‘முதலில் அடுப்பையும், ரெகுலேட்டரையும் ஆஃப் செய்துவிட வேண்டும். மின் பொருட்களின் ஸ்விட்ச் எதையும் ஆன் செய்துவிடக் கூடாது. ஆஃப் செய்யவும் கூடாது. கதவு, ஜன்னல்களை திறந்துவைத்துவிட்டு, வீட்டில் உள்ளவர்கள் வெளியேற வேண்டும். தாமதிக்காமல் அருகில் இருக்கும் கேஸ் டீலரை அழைக்க வேண்டும்.’’
‘‘சிலிண்டரின் எடை சரியாக இருக்கிறதா என்று எப்படி கண்டறிவது?’’
‘‘அதற்கான பிரத்யேக வெயிங் மெஷினை, டெலிவரிக்கு வருகிறவர்கள் எடுத்து வர வேண்டும் என்பதுதான் முறை. ஆனால், அதை யாரும் பின்பற்றுவது கிடையாது.
‘‘கேஸ் சேஃப்ட்டி டிவைஸ் எப்படி செயல்படுகிறது?’’
‘‘இதுவும் ரெகுலேட்டர்தான். இது, மூன்று விதமான பயன்களை அளிக்கிறது... சேஃப்டி, சேவிங்க்ஸ், மீட்டர்.
சேஃப்டி - இதிலிருந்து அவுட்புட் மட்டும் வரும்; இன்புட் எதுவும் எடுத்துக்கொள்ளாது. எனவே, டியூப் தீப்பிடித்தாலும் கேஸ் சிலிண்டர் வெடிக்காது. இதில் பொருத்தப்பட்டிருக்கும் சென்சார் மூலமாக கேஸ் லீக் ஆவதை அது தானாக உணர்ந்து, சிலிண்டரிலிருந்து அடுப்புக்கு கேஸ் செல்வதைத் தடுத்துவிடுவதால் விபத்துகள் தவிர்க்கப்படுகின்றன.
சேவிங்க்ஸ் - பொதுவாக சிலிண்டரிலிருந்து 320 பிஎஸ்ஐ பிரஷரில் அடுப்புக்கு கேஸ் வரும். சேஃப்டி டிவைஸ், இதைப் பாதியாகக் குறைத்துதான் அடுப்புக்கு அனுப்பும். இதனால், கேஸின் பயன்பாடு வழக்கமானதைவிட இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்.
மீட்டர் - இதிலுள்ள மீட்டர் மூலமாக கேஸ் எவ்வளவு தீர்ந்திருக்கிறது என்பதை துல்லியமாகக் கணக்கிட்டு, எப்போது கேஸ் தீரும் என்பதையும் கண்டறியலாம்.
இந்த ‘கேஸ் சேஃப்டி டிவைஸ்' கன் மெட்டலில் செய்யப்பட்டிருப்பதால் 30 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும்.  மேலும், NRV டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டிருப்பதால் சிலிண்டர் வெடிக்க வாய்ப்பில்லை. இது சுமார் 2,500 ரூபாய் விலையில் கிடைக்கும்.

Related

உபயோகமான தகவல்கள் 8154866723216438671

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item