வெற்றிலை நோயின்றி காக்கும் கற்பக மூலிகை!
நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும், நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் வெற்றிலை. கற்ப மூலிகைக...

https://pettagum.blogspot.com/2015/04/blog-post_93.html
வெற்றிலையை உபயோகிக்கும் முறை:
வெற்றிலை பயன்படுத்தும்போது, அதன் காம்பு, நுனி, நடுநரம்பு இவற்றை நீக்கி உபயோகிக்க வேண்டும். வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்து, 3.1% புரதச் சத்து, கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது. தற்போதைய ஆராய்ச்சியில், வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க, நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக, கண்டறியப்பட்டுள்ளது.
வெற்றிலையை மென்று சாப்பிடுவதால், மலச்சிக்கல் நீங்கும்; நன்கு பசி உண்டாகும்; வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். வெற்றிலைக்கு நாக இலை என்ற மற்றொரு பெயரும் உண்டு. பாம்பின் விஷத்தைக் கூட மாற்றும் தன்மை கொண்டதால், இதனை நாக இலை என்றும்
அழைக்கின்றனர்.

நுரையீரல் பலப்பட: வெற்றிலைச்சாறு, 5 மி.லி.யுடன், இஞ்சிச் சாறு, 5 மி.லி., கலந்து, தினமும் காலை வேளையில், வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாது. இவ்வாறு தொடர்ந்து ஒரு மண்டலம் அருந்தி வருவது நல்லது. வெற்றிலை இரண்டு எடுத்து, நன்றாக கழுவி, அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் சேர்த்து, நன்கு மென்று விழுங்கி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
தோல் வியாதிக்கு: 100 மி.லி., தேங்காய் எண்ணெய், 5 வெற்றிலையை போட்டு, சூடாக்கி வெற்றிலை சிவந்தவுடன், வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு படை இவைகளுக்கு தடவி வந்தால், எளிதில் குணமாகும்.
தலைவலி நீங்க: வெற்றிலைக்கு மயக்கத்தைப் போக்கும் குணமுண்டு. மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கி, கிடைக்கும் சாறில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்துபோகும்.
தீப்புண் ஆற: தீப்புண்ணின் மீது வெற்றிலையை வைத்து கட்டலாம்.
பிற உபயோகங்கள்: வெற்றிலையை எண்ணெயில் நனைத்து, விளக்கில் வாட்டி மார்பின் மேல் ஒட்டி வைக்க இருமல், மூச்சுத் திணறல், கடினமான சுவாசம், குழந்தைகளுக்கு இருமல் நீங்கும். வெற்றிலைச் சாறுடன், சுண்ணாம்பு கலந்து, தொண்டையில் தடவினால் தொண்டைக்கட்டு நீங்கும்.
தேள் கடி விஷம் இறங்க வெற்றிலைச் சாறு அருந்தலாம், கடிவாயில் தடவி வந்தால் விஷம் எளிதில் நீங்கும். இரண்டு அல்லது மூன்று வெற்றிலையை எடுத்து சாறு பிழிந்து, அதில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் அருந்தினால் நரம்புகள் பலப்படும். புற்றுநோயைக் குணப்படுத்தும் மருந்துகளில், வெற்றிலைக்கு முக்கிய பங்குண்டு.
Post a Comment