வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு.. வெளிநாட்டு அமைச்சக டிக்ரீ செர்டிபிகட் அட்டஸ்டேஷன்....!
வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு.. டிக்ரீ செர்டிபிகட் அட்டஸ்டேஷன்.... வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன்...

வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு..
டிக்ரீ செர்டிபிகட் அட்டஸ்டேஷன்....
வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன்வாங்குவது...
வெளிநாட்டு அமைச்சக அட்டஸ்டேஷன் வாங்குவதற்கு டெல்லி எல்லாம் செல்ல தேவை இல்லை....( டெல்லி தான் செல்ல வேண்டும் என்று ட்ராவல்ஸ் காரர்கள் பீலா விடுவார்கள்)
வெளிநாட்டு அமைச்சக துணை செக்ரடரியேட் சென்னையிலேயே அமைந்துள்ளது.. அமைந்துள்ள இடம்.
7-வது மாடி,
ஈ. வி.கே சம்பத் மாளிகை,
68, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம்,
சென்னை- தொலை பேசி: 044-28272200/28251323.
HRD அட்டஸ்டேஷன் செய்யப்பட்ட கான்வோகசன் செர்டிபிகட் அசல், அதன் ஒரு ஜெராக்ஸ் நகல், பாஸ்போர்ட் நகல் ..இவைகளை எடுத்து கொண்டு மேற்கண்ட அலுவலகம் செல்ல வேண்டும்.
ஒரு படிவத்தை தந்து நிரப்ப சொல்லுவார்கள்.... நிரப்பி கொடுக்க வேண்டும். எந்த வளைகுடா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்று அதில் குறிப்பிட வேண்டும்... மேற்கண்ட டாக்குமெண்டுகளை வாங்கி கொண்டு அக்னாலஜ்மென்ட் ஸ்லிப் தருவார்கள்..
"எந்த வித கட்டணமும் இல்லை ".... காலையில் 10 மணிக்கு கொடுத்தால் மாலை 4.30 முதல் 5.30 மணி வரை அந்த ஸ்லிப்பை காண்பித்து பெற்று கொள்ளலாம்..
Post a Comment