ஸ்பெஷல் சட்னி வகைகள்!
சட்னி கொள்ளு சட்னி கிரான்பெர்ரி சட்னி சிவப்புக் குடமிளகாய் சட்னி பாதாம் சட்னி முள்ளங்கி இலை சட்னி ரிட்ஜ் கார்ட் (பீ...

கொள்ளு - அரை கப்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 4 பல்
மிளகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 அல்லது காரத்துக்கு ஏற்ப
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒன்றரை டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவையான அளவு
கடுகு - கால் டீஸ்பூன்
எண்ணெய்/நெய் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் கொள்ளு சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்கவும். அல்லது சூடான தண்ணீரில் கொள்ளு ஐந்து மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். புளியைத் தனியாக தண்ணீரில் ஊற வைத்துக் கரைத்துக் கொள்ளவும். கொள்ளுப் பயறைக் கழுவி குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து புளிக்கரைசல், உப்பு தவிர தேவையானவற்றில் உள்ள அத்தனை பொருட்களையும் சேர்த்து மூன்று நான்கு விசில் விட்டு வேக வைக்கவும். சூடு ஆறியதும், புளிக்கரைசல், உப்பு சேர்த்து மசிக்கவும். இதை ஒரு கப்பில் எடுத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றைச் சேர்த்துத் தாளித்து கப்பில் ஊற்றிக் கிளறவும். இதனை சாதம் அல்லது தோசைக்குச் சேர்த்துச் சாப்பிடலாம்.
கிரான்பெர்ரி - அரை கப் (சூப்பர் மார்கெட்டில் கிடைக்கும்)
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 1 டீஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை - அரை கப்
காய்ந்த மிளகாய் - 2
சிவப்பு குடமிளகாய் - ஒன்றில் கால் பாகம்
எண்ணெய் - தேவையான அளவு
அடுப்பில் கடாயை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் வெங்காயத்தைப் போட்டு மிதமான தீயில் நிறம் மாற வதக்கவும். இதில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், சிவப்பு குடமிளகாய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் நன்கு வதக்கவும். இதில் கிரான்பெர்ரியைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கிரான்பெர்ரியின் நிறம் மாறும் வரை ஐந்து நிமிடம் நன்கு வதக்கவும். இறுதியாக மல்லித்தூள் (தனியாத்தூள்) சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவை நன்கு ஆறியதும் உப்பு, தேவையான அளவு தண்ணீர், வேர்க்கடலை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை தோசை அல்லது சூடான சாதத்தில் நெய், இந்த சட்னியை வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
பெரிய சிவப்புக் குடமிளகாய் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - ஒன்றில் பாதி
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளியை வெந்நீரில் சிறிது நேரம் ஊற வையுங்கள். குடமிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு சின்னச்சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஊறிய புளி (தண்ணீர் இறுத்தது), தக்காளி, குடமிளகாய் சேர்த்து மிக்ஸியில் மைய அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, அரைத்து வைத்திருக்கும் தக்காளிக் கலவையைச் சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து சட்னி சுருங்கும் வரை வதக்கவும். இதை தோசை அல்லது சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
பாதாம் - அரை கப் (ஊற வைத்து, தோல் நீக்கவும்)
புளி - எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்து இறுத்து வைக்கவும்)
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
சின்ன வெங்காயம் - 6 (இரண்டாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய் - தலா 1
கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - முக்கால் டீஸ்பூன்
எண்ணெய் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, இரண்டாக நறுக்கிய வெங்காயம், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு சேர்த்து வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும், அடுப்பை அணைத்து ஆறவிடவும். இந்தக் கலவையை மிக்ஸியில் சேர்த்து கூடவே புளிக்கரைசல், பாதாம், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியுடன் சேர்த்துப் பரிமாறவும்.
முள்ளங்கி இலை - ஒரு கப்
இரண்டாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 5
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
புளி - ஒரு சின்ன எலுமிச்சை அளவு (தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்)
துருவிய தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
பச்சை மிளகாய் - 1
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
முள்ளங்கி இலைகளைக் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், பச்சை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாற வதக்கி, முள்ளங்கி இலைகளைச் சேர்த்து, அவை சுருங்கும் வரை வதக்கவும். இதில் புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கிளறவும். புளியின் பச்சை வாசனை போனதும் தேங்காய் சேர்த்துக் கிளறி இறக்கி ஆற விடவும். ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து சட்னியில் ஊற்றி பரிமாறவும்.
மீடியம் சைஸ் பிர்க்கன்காய் - 2
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பீர்க்கன்காயின் மேற்புறத்தில் உள்ள கடினமான தோலை நீக்கிக் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கி, தனியாக வைக்கவும். அதே சட்டியில் பீர்க்கன்காயைச் சேர்த்து சுருங்க வதக்கவும். அடுப்பை அணைத்து ஆற விட்டு, வதக்கியவற்றை எல்லாம் மிக்ஸியில் சேர்த்து உப்பு, தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்து தனியாக ஒரு பவுலில் எடுத்து வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து, சட்னியில் இட்டு கலக்கிப் பரிமாறவும்.
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
மீடியம் சைஸ் தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மிக்ஸி ஜாரில் வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், புளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் மைய அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் அரைத்தவற்றைச் சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடம் குறைந்த தீயில் வேக விட்டு எடுத்தால், பச்சை வாசனை போய் சட்னி சுவைக்க சூப்பராக இருக்கும். அல்லது அரைத்த சட்னியில் தாளித்தவற்றைக் கொட்டிக் கிளறி, சாப்பிட்டால் லேசாக பச்சை வாசனையுடன் காரமாக, சட்னி சுவைக்க அருமையாக இருக்கும்.
தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் - 5 (காரத்துக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்)
பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - ஒரு டேபிஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - அரை டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி பூண்டு, மிளகாயைப் போட்டு மூன்று நிமிடம் நன்கு வதக்கி ஒரு தட்டில் ஆற வைக்கவும். இதே கடாயில் தக்காளி சேர்த்து மைய வதக்கவும். அடுப்பை அணைத்து ஆற வைக்கவும். வதக்கிய பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் இரண்டு சுழற்று சுழற்றி, பின்பு தக்காளியைச் சேர்த்து நன்கு அரைக்கவும். இதை ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய், கடுகு தாளித்து, சட்னியில் கொட்டிக் கிளறிப் பரிமாறவும்.
நீளமான கத்திரிக்காய் - 1 (மீடியம் சைஸ்)
எண்ணெய் , கடுகு - தலா 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கத்திரிக்காயைக் கழுவி, ஈரம் போக நன்கு துடைக்கவும். கத்திரிக்காயின் மேல் எண்ணெய் தடவி கத்தியில் குத்தி அடுப்பில் காட்டி, எல்லா புறமும் சுட்டெடுக்கவும். ஆறியதும் தோலை நீக்கி ஒரு பவுலில் போட்டு கத்திரிக்காயை மசிக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கி ஆற விடவும். இனி, மசித்த கத்திரிக்காய், உப்பு, புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து சட்னியில் சேர்த்துக் கிளறவும். இட்லி, தோசை சாதத்தோடு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
பெரிய வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 3
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்
வெங்காயத்தைத் தோல் நீக்கிக் கழுவி நீளமாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும். அடுப்பை அணைத்து சூடு ஆறியதும், மிக்ஸியில் சேர்த்து லேசாக தண்ணீர் விட்டு திக்காக மைய அரைத்து, பவுலில் சேர்க்கவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, சட்னியில் சேர்க்கவும். இதை தோசை, இட்லியோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
புரோக்கோலி - 1 (பூக்களைப் பிரித்து முக்கால் கப் எடுக்கவும்)
மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி - சிறிய துண்டு
சிறிய தக்காளி - 1 (சற்று பெரியதாக நறுக்கவும்)
துருவிய தேங்காய் - 1 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
பூண்டு - 3 அல்லது 4
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு, உளுத்தம்பருப்பு போட்டு வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கவும். இதில் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். இதில் புரோக்கோலிப் பூக்களைச் சேர்த்து வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும். மல்லித்தூள் (தனியாத்தூள்), உப்பு, புளி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைக்கவும். சூடு ஆறியதும், மிக்ஸியில் இட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். இதை அப்படியே தோசை, இட்லிக்கு தொட்டுச் சாப்பிடலாம். தாளித்து ஊற்ற நினைப்பவர்கள் எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து, தாளித்து சட்னியில் ஊற்றிப் பரிமாறலாம்.
சின்ன வெங்காயம் - 5
பச்சை வேர்க்கடலை - முக்கால் கப்
பூண்டு - 5 பல்
மல்லி (தனியா) - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
காய்ந்த மிளகாய் - 1
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - அரை டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - 10 இலைகள்
தண்ணீர், உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும். வேர்க்கடலையின் பருப்புகளைத் தனியாக எடுத்து வெறும் வாணலியில் வறுத்து வைக்கவும். ஆறியதும் வேர்க்கடலையின் தோலை நீக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், மல்லி (தனியா), ஐந்து கறிவேப்பிலை இலைகள் சேர்த்து வெங்காயத்தின் நிறம் மாறும் வரை வதக்கவும். அடுப்பை அணைத்து கலவையை மிக்ஸியில் இட்டு, புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு, வேர்க்கடலை சேர்த்து நன்கு அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, மீதியிருக்கும் கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்த்துக் கிளறி இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.
கேரட் பெரியது - 1
தக்காளி - 1 (சிறியது)
சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய இஞ்சி - சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
புளி - சின்ன நெல்லிக்காய் அளவு
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
புளியைத் தண்ணீரில் ஊற வைக்கவும். கேரட்டின் தோலை நீக்கி, மெல்லியதாக சீவி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி தீயை மிதமாக்கி வெங்காயம், இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் வதக்கவும். வெங்காயத்தின் நிறம் மாறியதும் தக்காளி, உப்பு, சேர்த்து மைய வதக்கவும். சீவிய கேரட், புளிக்கரைசலை இதில் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி ஆற விடவும். இதை மிக்ஸியில் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அடுப்பில் கடாயை வைத்துத் தாளிக்க கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து வதக்கி, சட்னியில் சேர்த்துப் பரிமாறவும். டிபன் மற்றும் சாதத்தோடு தொட்டு சாப்பிடலாம்.
Post a Comment