?வங்கிக் கடன் மூலம் வாகனம் வாங்கிய நிலையில், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கேரன்டி தந்தவருக்கு (Guarantor) சிக்கல் வரும...
?வங்கிக் கடன் மூலம் வாகனம்
வாங்கிய நிலையில், அந்தக் கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கேரன்டி
தந்தவருக்கு (Guarantor) சிக்கல் வருமா?
ஏ.ரூபன்ராஜ், ராஜபாளையம்,
ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்.
‘‘வங்கியின் நிலை:
வாகனக் கடனைப் பொறுத்தவரை, கடன் வாங்கியவருக்குத்தான் கடனை திருப்பிச்
செலுத்த முழுப்பொறுப்பு இருக்கிறது. எதிர்பாராதவிதமாகக் கடன் திருப்பிச்
செலுத்தப்படவில்லை என்றால் வங்கி அல்லது கடன் வழங்கிய நிதி நிறுவனம்,
வாகனத்தைப் பறிமுதல் செய்து, விற்று கடன் தொகையை எடுத்துக் கொள்ளும்.
வாகனத்தை விற்றுக் கிடைத்த பணம் கடன் தொகைக்குக் குறைவாக இருந்தால், வங்கி /
நிதி நிறுவனம் கடன் வாங்கியவரிடம் பாக்கி தொகையை வசூலிக்கும். அப்படியும்
கடனை திருப்பிச் செலுத்தவில்லை என்றால், கடனுக்கு கேரன்டி அளித்தவரை அணுகி
கடனை வசூலிக்கலாம். கேரன்டி தந்தவர் நிலை: கடன் வாங்கியவர் கடனை
திருப்பிக் கட்ட இயலாமல் வாகனம் பறிமுதல் செய்யப்படும் நிலையில், அந்தக்
கடனுக்கு கேரன்டி தந்தவர், வங்கி மற்றும் கடனாளி யின் சம்மதத்தோடு
வாகனத்தின் பாக்கி கடன் தொகையையும் வங்கியிடம் செலுத்தி வாகனத்தை
வாங்கலாம். உறுதி அளித்தவர் வாகனத்தை வாங்க செய்த செலவை கடனாளியிடமிருந்து
திருப்பி வசூலிக்க உரிமை உண்டு.
கடனாளியின் நிலை:
கடனாளி வங்கியிடமிருந்து வாங்கிய கடன் தொகையைக் கட்ட முடியாமல், கேரன்டி
அளித்தவர் வங்கிக்கு கடன் தொகையைக் கட்டி வாகனத்தை எடுத்துக்கொண்டால், கடன்
வாங்கியாவது கேரன்டி தந்தவரின் சம்மதத்தோடு, வங்கிக்குச் செலுத்திய தொகையை
அவருக்கு திருப்பிச் செலுத்திவிட்டு, வாகனத்தை எடுத்துக்கொள்ளலாம்.’’
==========================================================================
?என் வயது 61. எனக்கு ஒரு மகன்
(வயது 35), ஒரு மகள் (29) இருக்கிறார்கள். என் அப்பா சுயமாக சம்பாதித்த
சொத்து எனக்கு உயில் மூலமாகக் கிடைத்தது. இப்போது இந்தச் சொத்தை நான்
யாருக்கெல்லாம் எழுதிவைக்க முடியும்?
அ.ராமநாதன், நாகப்பட்டினம்,
சுரேஷ் பாபு, வழக்குரைஞர்.
"இந்தச் சொத்து உங்களுக்கு உயில் மூலம் கிடைத்துள் ளதால், இதனை உங்களின்
சொந்த சொத்தாகவே கருதப்படும். எனவே, இந்தச் சொத்தை நீங்கள் யாருக்கு
வேண்டுமானாலும் எழுதிவைக்க உங்களுக்கு உரிமை உண்டு. சொத்து மற்றும் வாரிசு
பிரச்னைகளில் சில நுணுக்கமான சட்ட சிக்கல்கள் எழக்கூடும் என்பதால்
வழக்குரைஞர் ஒருவரை கலந்தாலோசித்து, அவர் வழிகாட்டுதலுடன் செயல்படுவது
நல்லது."
2 comments
முதல் கேள்விக்கான பதில் முற்றிலும் சரி எனச் சொல்ல
இயலவில்லை.
ஒரு வாகனக் கடன் வாங்கிய நபர் இ.எம்.ஐ. என மாதாந்திரம் செலுத்தாது 3 தவணைகளுக்கு மேல் இருந்தால், காரண்டாருக்கும் நோட்டிஸ் அனுப்பப்படுகிறது.
அந்த நோட்டிஸ் வாசகங்கள் காரண்டாரின் சம்பளம் ஜப்தி செய்யப்படும் என்ற பயமுறுத்தலும் உள்ளடிக்கியிருக்கிறது.
ஒரு மிடில் கிளாஸ் வங்கி அலுவலர் தெரியாத்தனமாக ஆட்டோ கடனுக்கு காரண்டி செய்யப்போய், ஆட்டோ கடன் வாங்கியவர் வங்கிக்கும், காரண்டாருக்கும் தெரியாமல், ஆட்டோ வை விற்று விட, காரண்டாருக்கு நோட்டிஸ் வர,
பாவம், காரண்டார் தவித்துப்போய் விட்டார். இது நடந்தது 1980 ல். .
இது மாதிரியான சந்தர்ப்பங்களில், பொது துறை வங்கிகள், சற்று மனிதாபிமானத்துடன் செயல்படுகின்றன.
தனியார் வங்கிகளிடம் அதை எதிர்பார்க்க முடியாது. எளிதில் கடனை வசூல் செய்ய எந்த வழிகளையும் அவர்கள் கடைப்பிடிப்பார்கள்.
அண்மையில், வராத கடன்களை, ஒட்டு மொத்தமாக ஒரு தர்டு பார்ட்டிக்கு விற்று விடும் சூழ் நிலை இருக்கிறது. அதைத் தவிர
கலேக்டிங் ஏஜென்சி அவர்களுக்கே உரிய வழிகளில் வசூல் செய்ய முற்படுகிறார்கள்.
ஆக, காரண்டி போடுமுன்,
ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கவும்.
வூட்டுக்காரியைக் கேட்டு எதிலும் கையெழுத்து போடுங்கள்.
பெண் புத்தி பின் புத்தி என்பார்கள்.
உண்மை.
பின்னே வருவதையும் முன்கூட்டி சொல்லும் திறமை கொண்டவர்கள்
வீட்டுப் பெண்டிர்.
சுப்பு தாத்தா.
அன்பிற்கினிய நண்பர் சிவா என்கிற சுப்பு தாத்தா அவர்களுக்கு வணக்கங்கள்! தங்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று! ஜாமீன் போடும் நபர்கள் இதையும் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் என்று நானும் விருப்புகின்றேன். அடிக்கடி நல்ல கருத்துறைகளை தரவேண்டுகின்றேன். இப்படிக்கு என்றும் அன்புடன் பெட்டகம் A.S.முஹம்மது அலி
Post a Comment