“காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, மிகத் தவறான நடைமுறை.....! ஹெல்த் ஸ்பெஷல்!!
எழில்முத்து, பாலவாக்கம். “எனது நண்பர் காலை உணவு சாப்பிடுவதில் அவ்வளவு அக்கறை காட்டுவது இல்லை. ‘டீ, பன்’தான் அவருக்கு காலை டிபன். கடந்த...

https://pettagum.blogspot.com/2014/11/blog-post_13.html
எழில்முத்து, பாலவாக்கம்.
“எனது நண்பர் காலை உணவு
சாப்பிடுவதில் அவ்வளவு அக்கறை காட்டுவது இல்லை. ‘டீ, பன்’தான் அவருக்கு
காலை டிபன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதையே தொடர்ந்து ஃபாலோ செய்கிறார்.
அவருக்கு உடலளவில் கோளாறுகள் வந்த மாதிரியும் தெரியவில்லை. எதிர்காலத்தில்
பிரச்னைகள் வரக்கூடுமோ?”
ஆர்.கிருஷ்ணமூர்த்தி, உணவு ஆலோசகர், சென்னை
“காலையில் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது, மிகத்
தவறான நடைமுறை. காலையில் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கும்.
அப்போது உடலுக்கு வேண்டிய சக்தியை காலை உணவே தருகிறது. காலை முதல் இரவு
வரை நன்கு வேலை செய்ய உடலுக்கு கார்போஹைட்ரேட், நார்ச்சத்து,
தாதுச்சத்துக்கள் மிகமிக முக்கியம். இதில், ஏதாவது ஒரு சில சத்துக்கள்
மட்டுமே கிடைக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்வதும் நல்லதல்ல. வெறும் டீ,
பன் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தால், மாவுச் சத்து மட்டுமே கிடைக்கும்.
இளவயது என்பதால், உடலில் எந்தவித நோயும் வராமல் இருக்கலாம். ஆனால்,
காலப்போக்கில் பல்வேறு பிரச்னைகள் வரக்கூடும். 40 வயதுக்கு மேல் வரும் பல
நோய்களுக்கு, சரிவிகித உணவு சரியாக எடுத்துக்கொள்ளாதது முக்கியக் காரணம்.
உங்கள் நண்பரிடம் காலை உணவை சரியாக 7.30 மணியிலிருந்து 8 மணிக்குள்ளாக
உண்ணப் பழகச் சொல்லுங்கள். காய்கறி, பழங்கள், தானியங்கள் என உடலுக்குத்
தேவையான எல்லாச் சத்துக்களும் அந்த உணவில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ள
வேண்டும். அப்போதுதான் வயது ஏறினாலும், உடல் வலுவோடு இருக்கும்.”
Post a Comment