மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்! இயற்கை வைத்தியம்!!
மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்! 'க ண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் மெட்ராஸ் ஐ என்று அர்த்தம்!’ என்றாகிவிட்டது இன்ற...

https://pettagum.blogspot.com/2014/11/blog-post_10.html
மிரட்டும் ‘மெட்ராஸ் ஐ’... விரட்டும் வழிகள்!
'கண்ணும்
கண்ணும் கொள்ளை அடித்தால் மெட்ராஸ் ஐ என்று அர்த்தம்!’ என்றாகிவிட்டது
இன்று. ஆம்... எங்கு பார்த்தாலும் கறுப்பு கண்ணாடியுடன்தான் அலைகிறார்கள்.
''இது, பருவநிலை மாறுபாடு காரணமாக வரும் ஒரு
தொற்றுநோய். கண் அரிப்பு, கண் சிவப்பாக மாறுவது, கண் எரிச்சல், கண்களில்
நீர் வடிவது போன்றவை இந்தக் கண் நோய்க்கான அறிகுறிகள். பொதுவாக, இந்தக் கண்
நோய் 7 நாட்கள் வரை இருக்கும். கவனித்து சிகிச்சை எடுக்காவிட்டால் 15
நாட்கள் வரை இதன் வீரியம் இருக்கும்.
காற்று, கைகுலுக்குதல் மற்றும் நோயால்
பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை (கர்ச்சீஃப், துண்டு, பேனா, அழிப்பான்,
பேப்பர்) பயன்படுத்துவது மூலம் இது பரவும். ஒருவர் பயன்படுத்திய
கண்ணாடியையும் மற்றவர் பயன்படுத்தக் கூடாது.
பாதிக்கப்பட்டவர்கள், ரோஸ் வாட்டரை கண்களில் விட்டு
கண்களை திறந்து மூட வேண்டும். காலை, மாலை என இரண்டு, மூன்று நாட்களுக்கு
இப்படி செய்துவர, குணம் கிடைக்கும். சுத்தமான பஞ்சில் பன்னீரை விட்டு,
மூடிய கண்கள் மீது வைக்கலாம். இது கண்களில் இருக்கும் உஷ்ணத்தைக்
குறைக்கும். இதை மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.
காலை, மாலை சிறிது நேரம்
நந்தியாவட்டை மலரை எடுத்து கண் இமை மீது ஒற்றி எடுக்கலாம். இ்தையும் மூன்று
நாட்கள் தொடர்ந்து செய்துவர, 'மெட்ராஸ் ஐ’ காணாமல் போய்விடும்.
குழந்தைகளுக்கு மிக எளிதில் பரவும் இந்நோய்க்கு, பன்னீர் மிகச்சிறந்த
நிவாரணி.
தாங்கள் பயன்படுத்தும் ரோஸ் வாட்டர் மற்றும் பன்னீர் ஆகியவை
தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம்'' என்று
சொன்ன அர்ஜுனன்,
''சித்த வைத்தியமாக இருந்தாலும், வேறு மருத்துவ
முறைகளாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை இன்றி, சுயமாக சிகிச்சை
செய்துகொள்வது ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்'' எச்சரித்து முடித்தார்.
Post a Comment