ஆளி விதை செய்யும் அற்புதங்கள்! ஹெல்த் ஸ்பெஷல்,

தற்போது கிடைக்கும் கொட்டைகள், விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் (Flaxseed அல்லது Linseed) எனப்படும் ஆளி விதை. இது லினன் (Line...

தற்போது கிடைக்கும் கொட்டைகள், விதைகளில் குறிப்பிடத்தக்கது ஃபிளாக்ஸ்சீட் (Flaxseed அல்லது Linseed) எனப்படும் ஆளி விதை. இது லினன் (Linen) எனப்படும் நூலிழையைத் தரும் தாவரத்தின் விதை. எள் என்பது விதைகளின் நாயகன் என்று சொல்லலாம். அதேநேரம், மனித இனம் சாப்பிட்ட மிகவும் பழமையான உணவு வகைகளில் ஒன்று இந்த ஆளிவிதை. பாபிலோனியர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன் இதைப் பயிரிட்டுப் பயன்படுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. மத்திய தரைக் கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்ட பயிர் இது. 

பயன் நிறைந்தது
 
இதன் லத்தீன் பெயரான linum usitatissimum என்பதற்கு மிகவும் பயனுள்ளது என்று அர்த்தம். அது உணவுப் பொருளாக மட்டுமின்றி, துணிகளை நெய்வதற்கான நூலிழையாகவும் பழங்காலத்தில் பயன்பட்டிருக்கிறது. பழங்காலப் பாய்மரக் கப்பல்களில் பயன்பட்ட துணிகள் இதைக் கொண்டே நெய்யப்பட்டன. ஆளி விதை எண்ணெய் தற்போது வரை மரத்தை மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது. 

ஆளி விதை ஓர் அட்டகாசமான உணவுதான். தாவர உணவுப் பொருட்களிலேயே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் கொண்டது இது. நமது உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான இந்தக் கொழுப்பு அமிலங்களை, நமது உடலால் சுயமாக உற்பத்தி செய்ய முடியாது. 

இந்தக் கொழுப்பு அமிலம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் (Essential fatty acid - EFA). ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துடன் ஒமேகா 6-ம் இருப்பதால், செல் செயல்பாடுகளை ஆரோக்கிய மாக வைத்திருக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவியாக இருப்பதுடன், இதயத்துக்குப் பாதுகாப்பையும் ஆளி விதை உறுதிப்படுத்துகிறது. உடல் நோய் எதிர்ப்பாற்றலை வலுப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. 

ஆளி விதையில் லிக்னன் என்ற தாவர வேதிப்பொருளும் இருப்பதால் பாலிஃபீனால், ஃபைட்டோஈஸ்ட்ரோஜென் போன்றவை உடலுக்குக் கிடைக்கின்றன. இது பெண்களின் ஹார்மோன் சமநிலையைப் பாதுகாத்து, மாதவிடாய் சுழற்சியை இயல்பாக வைக்கிறது, மேலும் இந்த வேதிப்பொருட்கள் ஆன்ட்டி ஆக்சிடண்ட், பாக்டீரிய எதிர்ப்பு, பூஞ்சை தொற்று எதிர்ப்பு, வைரஸ் தொற்று எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டி ருப்பதால், மார்பகம், குடல், புராஸ்டேட் புற்றுநோய்களைத் தடுக்கும் தன்மையைத் தருகிறது.

Flax Seedsயில் Omega-3 அதிகம் இருக்கின்றது. மீன் சாப்பிடாதவர்கள் இதனை அதற்கு பதிலாக சாப்பிடலாம்.

மற்றும் இதில், அதிக அளவு Magnesium, Phosphorous, Copper, Thiamine, Maganese and Dietary Fiber (நார் சத்து ) அதிக அளவில் இருக்கின்றது.

ஆளிவிதையை இரவில் ஊறவைத்து காலையில் சுண்டல் போல தாளித்துச் சாப்பிட்டு வந்தால் மூன்று நன்மைகள் உறுதியாக உண்டு.

முதலில் இதயத்தைக் காப்பாற்றுகிறது, இரண்டாவது மூளையின் சக்தி அதிகரிக்கிறது. மூன்றாவது புற்றுநோய்வராமல் தடுக்கிறது.

100 கிராம் ஆளிவிதை 530 கலோரி சக்தி, 37 கிராம் நல்ல கொழுப்பு, 28 கிராம் நார்ச்சத்து, 20 கிராம் புரதம் தருகிறது. புரதச் சத்து நிறைந்துள்ள ஆளிவிதையில் லிக்னன்ஸ், நார்ச்சத்து, ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலம், என்று மூன்று உயிராற்றலைச் சுறுசுறுப்பாக்கும் சத்துக்களும் உள்ளன.

இந்த மூன்று சத்துகளும் முதலில் இரத்தக்குழாய்களை நன்கு சுத்தம் செய்து கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றிவிடுகின்றன. நாம் சாப்பிடும் சில உணவுகளில் ஒமேகா-3ம், நார்ச்சத்தும் இருக்கின்றன. ஆனால், லிக்னன்ஸ் கிடையாது. ஆளிவிதையில் மட்டுமே இது உண்டு.

இந்த லிக்னன்ஸ் இருப்பதால் ஆளிவிதை உடலில் சேர்ந்ததுமே உயர் இரத்த அழுத்தமும், இதய நோய்களும் உடனே குணமாக ஆரம்பிக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க்காரணிகள் எங்கே இருந்தாலும் லிக்னன்ஸ் அதைக் கரைத்து வெளியேற்றி விடுகிறது. பரிசோதனைச் சாலையில், விலங்குகளுக்கு 7 வாரங்கள் தினமும் ஆளிவிதை கொடுத்ததில் 50% மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் சுருங்கி குணமாகியி ருந்ததை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன.

மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்து பெருங்குடலில் அனைத்தையும் இளக்கி வெளியேற்றிவிடும். இதேபோல சிறுநீரகங்களில் கற்கள் உருவாகாமலும் ஆளிவிதை பாதுகாக்கிறது.

மீனில் கிடைக்கும் அதே தரத்துடன் ஒமேகா-3 இந்த விதைகள் மூலம் எளிதில் கிடைப்பதால் நரம்பின் நுண்ணறைகள் மிகவும் பலம் பெறுகின்றன. இதனால் சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டு மன இறுக்கமோ அ ல்லது ஞாபக சக்தி குறைபாடோ வராது. மூளையின் ஞாபகசக்தி செல்கள் சுருங்காமல் பார்த்துக் கொள்வதில் இந்த விதை முதலிடத்தில் இருக்கிறது.

அதிக சக்தியும் அதிகக் கொழுப்பும் உள்ள இந்த அரிய உணவை, சுண்டலாகச் சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கவலையும் வேண்டாம்.இதயத்திற்கும் மூளைக்கும் நன்மை தரும் கொழுப்புதான் இவை.அதிக சக்தியால் குறைவான உணவையே உண்போம். காராமணி, கொண் டைக்கடலை போல் அதிகப் பசியையும் இந்த ஆளி விதை கட்டுப்படுத்துகிறது. கடைகளில் ஃப்ளாக்ஸ் சீட், லின்சீட், அல்ஸி என்ற பெயர்களில் இந்த விதை விற்பனையாகிறது.

கொலஸ்டிரால், சக்கரையின் அளவினை அதிகம் குறைக்க உதவுக்கின்றது.

Flax Seedsயின எப்பொழுதும் அப்படியே சாப்பிட கூடாது. அதனை முழுவதாக அப்படியே சாப்பிட்டால், அது ஜீரணம் ஆகாமல் அப்படியே வெளியேறிவிடும். அதனை சாப்பிட பலனும் கிடையாது. அதனால், கண்டிப்பாக அதனை பொடித்து தான் சாப்பிடுவது நல்லது.

இனி இதனை கொண்டு உணவு வகைகள் எவ்வாறு உண்டாக்குவது என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் – 2 கப்

Flax Seeds பொடி செய்ய :
ப்ளாஸ் ஸுட்(Flax Seeds) – 2 மேஜை கரண்டி
கடலைப்பருப்பு – 1 மேஜை கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 மேஜை கரண்டி
தனியா – 2 மேஜை கரண்டி
காய்ந்த மிளகாய் - 3
கடுகு – 1/2 தே.கரண்டி
வெந்தயம் – 1/2 தே.கரண்ட
உப்பு – 1/2 தே.கரண்டி
பெருங்காயம் – சிறிதளவு
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு பூண்டு – 3 பல் தோலுடன் (வறுக்க வேண்டாம்)

(குறிப்பு : இதில் காய்ந்த மிளகாயினை நீக்கி சிறிது மிளகினை சேர்த்து அரைத்து கொள்ளலாம்.)

தாளித்து கொள்ள :
நல்லெண்ணெய் – 1 மேஜை கரண்டி
கடுகு, கடலை பருப்பு, கருவேப்பில்லை - சிறிதளவு

செய்முறை :

பொடி செய்து கொள்ள :
முதலில் flax Seeds + தனியா + கடலைப்பருப்பு + உளுத்தம்பருப்பு என ஒவ்வொரு பொருட்களாக தனி தனியாக போட்டு வறுத்து கொள்ளவும்.

பிறகு காய்ந்த மிளகாய் + கடுகு, வெந்தயம் + புளி என்று ஒவ்வொன்றாக மற்ற பொருட்களையும் சேர்த்து வறுத்து வைத்து சிறிது நேரம் ஆறவிடவும்.

மிக்ஸியில் முதலில் தனியா போட்டு பொடிக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாயினை சேர்த்து பொடிக்கவும்.

அத்துடன் கடலைப்பருப்பு , உளுத்தம்பருப்பு + கடுகு, வெந்தயம் சேர்த்து பொடிக்கவும்.

பிறகு Flax Seeds + புளி + உப்பு + பெருங்காயம் சேர்த்து பொடித்து கொள்ளவும். கடைசியில் பூண்டினை சேர்த்து 1 – 2 முறை Pulse Modeயில் இத்துடன் சேர்த்து அரைத்து கொள்ளவும்,

தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சாதத்தில் சேர்க்கவும். அத்துடன் தேவையான அளவு பொடியினை சேர்த்து கிளறவும்.

சுவையான சத்தான சாதம் ரெடி.

குறிப்பு :
புளியினை கடாயில் வறுப்பதால் சூட்டில் சிறிது இளகிவிடும். மிக்ஸியில் போட்டு அரைக்கும் பொழுது ஈஸியாக இருக்கும்.

ஒவ்வொரு பொருட்களையும் தனி தனியாக தான் வறுக்க வேண்டும். அதே மாதிரி அரைக்கும் பொழுதும் தனி தனியாக அரைத்தால் ரொம்ப சூப்பராக இருக்கும்.

இந்த பொடியினை இட்லி, தோசையுடன் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.

அதிகம் பொடி செய்து கொள்வதாக இருந்தால், இதே மாதிரி செய்து வைத்து கொள்ளலாம். அப்படி செய்யும் பொழுது புளியினை சேர்க்க வேண்டாம்.

ஆளி விதை இட்லி பொடி

தே.பொருட்கள்
ஆளி விதை - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் - சிறு கட்டி
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,தனியா - தலா 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1/4 டீஸ்பூன்

செய்முறை
பெருங்காயம்+கா.மிளகாய் தவிர அனைத்தையும் வெரும் கடாயில் வறுக்கவும்.

சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து ,பின் கா.மிளகாயை வறுக்கவும்.

அனைத்தையும் ஆறியதும் ஒன்றாக உப்பு சேர்த்து அரைக்கவும்.

பி.கு

இந்த பொடியை உருளை,வாழைக்காய் வறுக்கும் போது இந்த பொடியை தூவி வறுக்கலாம்.

மலச்சிக்கல் குறைய (ஆளி விதை)

2 மேஜைக்கரண்டி ஆளி விதை எண்ணெயை எடுத்து அதிகமான தண்ணீரில் கலந்து மதியம், இரவு சாப்பாட்டிற்கு பிறகு குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

கோழைக்கட்டு குறைய‌ - ஆளி விதை , எள் ., தேன்

செய்முறை:

ஆளி விதை மற்றும் எள்ளை தனித்தனியாக இடித்து பொடி செய்து ஒன்றாக கலந்து 1 தேக்கரண்டி அளவு பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு, மூச்சுக்குழலழற்சி ஆகியவை குறையும்.

 
புற்றுநோய் எதிர்ப்பு
 
மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் ஆளி விதைக்கு உள்ளதை அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. உடலில் உள்ள துடிப்பு மிக்க ஹார்மோன்களை தாக்கும் புற்றுநோய்கள் மற்றும் மார்பக புற்றுநோய்க்கு சாப்பிடும் மருந்தான டாமோக்ஸிபென்னின் (Tamoxifen) பாதையில் குறுக்கிடாமல் பாதுகாப்பு அளிக்கும் வகையிலும் ஆளி விதையில் உள்ள லிக்னான்ஸ்கள் செயல்படுகின்றன.
 
இதயத்தின் நண்பன்
எரிச்சலை தவிர்த்தல் மற்றும் இதயத் துடிப்பை சமனப்படுத்துதல் போன்றவற்றை செய்யும் திறன் மிக்க மருந்தாக ஒமேகா-3 உள்ளதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒமேகா-3 நிரம்பியுள்ள ஆளி விதைகள் தமனிகள் கெட்டிப்படுவதை தவிர்க்கின்றன. வெள்ளை அணுக்களை இரத்த நாளங்களின் உள் வளையங்களுடன் இணைத்து வைப்பதன் மூலம் தமனிகளில் கழிவுகள் சேருவதையும் ஒமேகா-3 தவிர்க்கிறது. இந்த ஒமேகா-3 ஆளி விதைகளில் பெருமளவு குவிந்துள்ளது.

நீரிழிவு 
 
ஆளி விதையின் லிக்னான்ஸ்களை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு மேம்படுகிறது என்று முன்னோடி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (ஹீமோகுளோபின் A1c ஆய்வுகளின் போது, இரத்தத்தில் 2 வகையான நீரிழிவு நோய்கள் கணடறியப்படுகின்றன)

எரிச்சலும், எதிர்ப்பும் 
 
ஆளி விதையில் உள்ள ALA மற்றும் லிக்னான்ஸ் ஆகிய இரண்டு பொருட்களும் பர்கின்ஸன் நோய் (Parkinson's Disease) மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களுடன் வரக் கூடிய எரிச்சலை தவிர்க்கும் குணத்தை கொண்டுள்ளன. இந்த விதைகள் எரிச்சலைத் தூண்டக் கூடிய சில பொருட்கள் வெளிப்படுவதைத் தவிர்க்கின்றன என்று பிட்ஸ்பாட்ரிக் (Fitzpatrick) குறிப்பிடுகிறார். மனிதர்களுக்கு ஏற்படும் எரிச்சலை தவிர்க்கும் குணம் ALA-விற்கு உண்டு. மேலும், விலங்குகளின் மேல் செய்யப்பட்ட ஆய்வுகளில் ஆளி விதையின் லிக்னான்கள் எரிச்சலை ஏற்படுத்தும் பொருட்களின் அளவை குறைப்பதில் பெரும் பங்கு வகிப்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. தமனிகளின் எரிச்சலை தவிர்ப்பதன் மூலம் அவற்றில் கழிவுகள் சேர்வது தவிர்க்கப்படுகிறது. இந்த வகையில் ஆளி விதைகள் மாரடைப்பு ஏற்படுவதையும், வலிப்பு ஏற்படுவதையும் தவிர்க்கும் அருமருந்தாக உள்ளது.


ஹாட் ஃப்ளாஷ் (Hot Flashes)
 
 2007-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒரு ஆய்வில், மாதவிடாயின் இறுதி பருவத்தில் உள்ள பெண்கள், தினமும் 2 தேக்கரண்டிகள் ஆளி விதையை உணவு, பழரசம் அல்லது தயிரில் கலந்து சாப்பிடுவதன் மூலம் தங்கள் உடலில் உள்ள ஹாட் ஃப்ளாஷ்களை (Hot Flashes) குறைத்திட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையில் சுமார் 57% அளவிற்கு ஹாட் ஃப்ளாஷ்களை குறைத்திட முடியும். இந்த வகையான பலன்களை குறைந்தபட்சம் ஒரு வாரத்திலோ அல்லது அதிகபட்சம் இரண்டு வாரங்களிலோ பெண்கள் அடைந்து, ஆச்சரியப்படும் சூழலை ஆளி விதை உருவாக்கும். 
 
முட்டைக்கு மாற்று
 
ஆளி விதைக்கு மற்றொரு சிறந்த பண்பும் உண்டு. அது பிசுபிசுப்பாக மாறிவிடும் தன்மை. திரவப் பொருளுடன் ஆளி விதை சேர்ந்தால், அது ஜெல்லியைப் போல மாறிவிடும். இது குடலுக்கு நல்லது. குடலைத் தூய்மைப்படுத்தி, மலம்கழித்தலை இலகுவாக்கி, நீண்ட நேரம் உணவைக் குடலில் தங்க வைக்கிறது. இதன் மூலம் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளைக் கிரகிக்க, அதிக வாய்ப்பு கிடைக்கும். 

அதேபோல ஆளி விதையை பேக்கிங்கில் முட்டைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். மூன்று மேசைக்கரண்டி ஆளி விதையை நன்றாக அரைத்து, அரை கப் தண்ணீருடன் கலக்க வேண்டும். அது முட்டையின் வெள்ளைக் கரு போல மாறும் வரை இப்படிக் கலக்க வேண்டும். மாவு போன்ற பொருட்களைப் பிசைந்து சேர்க்க இது உதவும். 

சூட்டிலும் குறையாத சத்து
 
ஆளி விதையை நன்கு அரைத்து, இட்லி-தோசை மாவு, சப்பாத்தி மாவு போன்றவற்றை மென்மையாக்கப் பயன்படுத்த லாம். பொதுவாக, இதை அதிகம் பயன்படுத்தும் முறை இதுதான். ஆளி விதையைக் கொண்டு ஒமேகா 3 மேம்படுத்தப்பட்ட பீட்சா, தோசை, மஃபின், பிஸ்கட் போன்றவற்றைச் செய்யலாம். ஒமேகா 3-ல் ஒன்றான ஆல்பா லினோலிக் அமிலம் (Alpha linoleic acid - ALA) 150 டிகிரி செல்சியஸுக்குச் சூடேற்றினால்கூட எதுவும் ஆகாது. மகாராஷ்டிராவில் ஆளி விதையில் செய்யப்படும் சட்னி பிரபலம்.
அதேநேரம், ஒரு நாளில் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஆளிவிதையின் அளவு ஒன்று முதல் இரண்டு மேசைக்கரண்டிதான். அதாவது 30 கிராம். ஆளி விதைத் தூளை வாங்குவதைவிட, ஆளி விதையை வாங்கித் தேவைக்கேற்ற அளவு அவ்வப்போது நாமே அரைத்துக்கொள்வது நல்லது. ஏனென்றால், ஆளிவிதை சீக்கிரம் சத்துகளை இழக்கக்கூடியது. 
Related

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் 1568932317706266718

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள். சிந்தனை துளிகள். இந்த நாள் இனிய நாள் சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item