மிக்ஸி பயன்படுத்துவது எப்படி? சமையல் அரிச்சுவடி!
மிக்ஸி பயன்படுத்துவது எப்படி? இன்று மிக்ஸி இல்லாதவர்கள் வீட்டை பார்க்கமுடியாது..அந்த அளவிற்கு விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. மி...
மிக்ஸி பயன்படுத்துவது எப்படி?
மிக்ஸியை பயன்படுத்தும் போது லோ பவராக இருந்தால் மிக்ஸியை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் மிக்ஸியில் பொருத்தப்பட்டு இருக்கும் மோட்டார் பழுதடைந்துவிடும். மிக்ஸரில் பவர் ஏற்றும் போது முன்றில் இரண்டு பங்கு தான் போட வேண்டும்.
ஜாரில் போட்டு அரைத்தது முடித்ததும் உடனே அதில் தண்ணீர் ஊற்றி மிதமான வேகத்தில் வைத்து ஒரு சுற்று சுற்றி அலசி தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத்திரங்களை சுத்தம் செய்யும் போது சுத்தம் செய்யலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்துப் போடக் கூடாது.
மாவு கெட்டியாக வேண்டும் என்று கெட்டியாக அரைப்பதால் மிக்ஸி எளிதில் பழுதாகிவிடும்.
மிக்ஸின் பிளேடுகள் மழுங்கி விட்டால் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் அரைத்தால் பிளேடுகள் கூர்மையாகிவிடும். மிக்ஸி பிளேடுகளை சாணை வைக்ககவே கூடாது. மிக்ஸி பிளேடுகள் மோட்டாரின் வேகத்தைப் பொறுத்தே நைசாக அரைக்கும்.
ஜாடுகளின் அடிப்பகுதி பழுதாகி விட்டால் அல்லது அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனே ஜாடை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.
மிக்ஸி ஓடும் போது மூடியைக் கையினால் அழுத்திக் கொள்ள வேண்டும். மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.
அரைக்கும் போது பிளேடுகள் லூசாகி உள்ளதா என்பதைக் கவனித்து டைட்டு செய்து கொள்ள வேண்டும். மிக்ஸியில் ஜாடுகளின் அடிப்பாகத்தில் இரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற்கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதாகிவிடும்.
அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ நேரலாம். இட்லிக்கு மிக்ஸியில் அரிசி அரைக்கும் போது இரவே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்.
Post a Comment