ஆட்டுக்கால் சால்னா(பாயா) ! சமையல் குறிப்புகள்-அசைவம்!
ஆட்டுக்கால் சால்னா(பாயா) தேவையானவை ஆட்டுக்கால் - 2 செட் வெங்காயம் - 2 (பெரியது) தக்காளி - 2 (பெரியது) இஞ்சி பூண்...
ஆட்டுக்கால் சால்னா(பாயா)
- ஆட்டுக்கால் - 2 செட்
- வெங்காயம் - 2 (பெரியது)
- தக்காளி - 2 (பெரியது)
- இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
- கரம் மசாலா - கால் தேக்கரண்டி
- மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
- சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
- மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
- மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
- சில்லி பவுடர் - ஒரு தேக்கரண்டி (விருப்பப்பட்டால்)
- எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
- மல்லிக்கீரை, கறிவேப்பிலை - சிறிது
- பச்சை மிளகாய் - 2
- தேங்காய் துருவல் - 4 மேசைக்கரண்டி
- முந்திரி பருப்பு - 8
- மைதா - 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவைக்கு செய்முறை
- வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரையை நறுக்கி கொள்ளவும். தேங்காய் மற்றும் முந்திரிப்பருப்பை நன்றாக அரைத்து வைக்கவும்.
- ஆட்டுக்காலை வக்கி சுத்தம் செய்து கழுவி வைக்கவும். இல்லையெனில் வக்கிய ஆட்டுக்காலே கடையில் கிடைக்கிறது
- சுத்தம் செய்த ஆட்டுக்காலை மைதாமாவு, சிறிது உப்பு சேர்த்து கலந்து சிறிது நேரம் ஊற வைக்கவும்.
- ஆட்டுக்காலை கழுவி குக்கரில் போட்டு நறுக்கின வெங்காயம், தக்காளி, மல்லிக்கீரை, மசாலாத்தூள் வகைகள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கால் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- கொதி வந்த பின்பு குக்கரை மூடி வெயிட் போட்டு 2-3 விசில் வந்த பின்பு அடுப்பை குறைத்து வைக்கவும். இளங்காலாக இருந்தால் அரைமணி நேரம், சிறிது வழுவாக இருந்தால் ஒரு மணி நேரம் வைத்து வேக வைக்கவும்
- கால் வெந்து விட்டதை உறுதி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய், முந்திரிபருப்பு விழுதை சேர்க்கவும்.
- சிம்மில் வைத்து கால் மணி நேரம் கொதிக்க விடவும்.தேங்காய் வாடை அடங்கி சால்னா நெலுநெலுப்பாக இருக்கும்.
- பின்பு தாளிப்பு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலையை இளஞ்சிவப்பாக வதக்கி கொட்டவும்
- சுவையான சத்தான ஆட்டுக்கால் சால்னா ரெடி.
Post a Comment